'வலிமை' பட வில்லன் கார்த்திகேயாவுக்கு தீடீர் நிச்சயதார்த்தம்..! 11 வருட காதலியை கரம்பிடிக்கிறார்..!

Published : Aug 24, 2021, 12:28 PM IST
'வலிமை' பட வில்லன் கார்த்திகேயாவுக்கு தீடீர் நிச்சயதார்த்தம்..! 11 வருட காதலியை கரம்பிடிக்கிறார்..!

சுருக்கம்

அஜித்தின் 'வலிமை' படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயா கும்மகொண்டாவிற்கும் அவரது காதலிக்கும் ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாக ரசிகர்கள் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

அஜித்தின் 'வலிமை' படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயா கும்மகொண்டாவிற்கும் அவரது காதலிக்கும் ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாக ரசிகர்கள் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'Rx 100 ' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் கார்த்திகேயா கும்மகொண்டா.  பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமிழில் நடிகை ஓவியா கதையின் நாயகியாக நடித்த '90 ML ' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 

இந்நிலையில் தற்போது, அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பாப்புக்கு மத்தியில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தில் அதிரடி ஸ்டைலிஷ் வில்லனாக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து லோகிதா என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார். தற்போது 11 வருடம் கழித்து கழித்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள தயாராகியுள்ளனர்.

அந்த வகையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம், சமீபத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சிறப்பாக நடந்துள்ளது. இதுகுறித்த தகவல் ரகசியமாகவே இருந்த நிலையில் கார்த்திகேயா திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சில வெளியாகி வைரலானது.  எனவே இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக கார்த்திகேயா கும்மகொண்டா தன்னுடைய காதலி லோகிதாவை முதல்முறையாக சந்தித்தபோது எடுத்து புகைப்படத்தையும், தற்போதைய திருமண நிச்சயதார்த்தம் புகைப்படத்தையும் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இதை தொடர்ந்து இவர்களுக்கு ரசிகர்கள் மாற்று பிரபலன்க பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!