பாலாஜி விஷயத்தில் அந்தர் பல்டி அடித்த ஷிவானி..! அப்போ அப்படி பேசிட்டு இப்போ... இப்படி சொல்லிட்டாங்களே..?

By manimegalai aFirst Published Aug 24, 2021, 10:55 AM IST
Highlights

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது... பாலாஜி முருகதாஸும் ஷிவானியும் காதலிக்கிறார்களா என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. இருவரும் அப்படித்தா நடந்தும் கொண்டனர். ஆனால் தற்போது இவர்கள் திடீர் என அண்ணன் - தங்கையாக மாறியுள்ளது ரசிகர்களுக்கே செம்ம ஷாக் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
 

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது... பாலாஜி முருகதாஸும் ஷிவானியும் காதலிக்கிறார்களா என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. இருவரும் அப்படித்தா நடந்தும் கொண்டனர். ஆனால் தற்போது இவர்கள் திடீர் என அண்ணன் - தங்கையாக மாறியுள்ளது ரசிகர்களுக்கே செம்ம ஷாக் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சகோதரர்களை போற்றும்... ரக்சா பந்தன் கொண்டாடப்பட்டது. பல பிரபலங்கள் முதல், மக்கள் அனைவருமே, தங்களுடைய சகோதரர்களுக்கு, ரக்சா பந்தன் கயிறு கட்டி அவர்களிடம் இருந்து பரிசு பொருட்களையும் பெற்றனர். அந்த வகையில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், தெலுங்கு மெகா ஸ்டார்  சிரஞ்சீவிக்கு ராக்கி கட்டிய புகைப்படம் சமூக வலைத்தளத்தை தெறிக்கவிட்டது.

இந்த நிலையில், சீரியல் மூலம் அறிமுகமாகி...  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த ஷிவானி தற்போது வெள்ளித்திரை நடிகையாகவும் மாறியுள்ளார். எப்போதுமே சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் ரசிகர்களுடன் பேசினார் அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். ரசிகர் ஒருவர் ஷிவானியிடம் 'நீங்கள் ரக்சா பந்தன் தினத்தில் யாருக்கு ராக்கி கட்டினீர்கள் என்று கேட்ட கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு ஷிவானி சற்றும் ஜோசிக்காமல் பாலாவுக்கு ரக்சா பந்தன் கயிறு கட்டியதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். மேலும் பாலாஜி முருகதாஸுக்கு ரக்சா பந்தன் கயிறு காட்டியபோது எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களுக்கு செம்ம ஷாக்... காரணம், பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, காதலர்கள் போல நடந்து கொண்டனர். இதனால் ஷிவானியின் அம்மா வீட்டிற்குள் வந்த போது அவரை வெளுத்து வாங்கிய கதையெல்லாம் அனைவரும் அறிந்தது தான்.

பாலாஜியை நண்பர் என்று சொன்னால் கூட பரவாயில்லை, ஆனால் ஒரே அடியாக அண்ணன் என்று கூறி ஷிவானி அந்தர் பல்டி அடித்துள்ளார். என நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஷிவானி தற்போது திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ள தகவலையும் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!