திருவிழா கோலம் காண காத்திருக்கிறோம்... தியேட்டர் திறப்பு குறித்து உருகிய பாரதிராஜா!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 23, 2021, 09:23 PM IST
திருவிழா கோலம் காண காத்திருக்கிறோம்... தியேட்டர் திறப்பு குறித்து உருகிய பாரதிராஜா!

சுருக்கம்

 திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவைத்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

கொரோனா முதல் அலையின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்குள் இரண்டாவது அலை உண்டு, இல்லை என மக்களை உலுக்கி எடுத்துவிட்டது. திமுக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா 2வது அலையின் கோரதாண்டவம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் சில தளர்வுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. பெரும்பாலும் தளர்வுகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அதில் தியேட்டர்கள் திறப்பும் ஒன்று. அந்த வகையில்  கட்டுப்பாடுகளுடன் திரையரங்கை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் திரையரங்கு உரிமையாளர்களும், தயாரிப்பளர்களும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இன்றிலிருந்து 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்று அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதற்கு நன்றி தெரிவித்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "கடந்த இரண்டு ஆண்டுகளைத் திரையுலகின் கருப்பு நாட்களாக்கிவிட்டது இந்த கரோனா. படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டன. நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக்குறியோடு நகர்ந்த நாட்களில் இன்று முதல் திரையரங்குகளை 50% இருக்கைகளோடு திறந்துகொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக்கிறது.

ஆக்கிரமித்திருக்கும் நோய் விலகி, பல புதிய திரைப்படங்கள் வெளியாகி, திரையரங்குகள் முழுமையான திருவிழாக் கோலம் காணக் காத்திருக்கிறோம். திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவைத்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்