ஜாமீன் கேட்டு துடிக்கும் மீரா மிதுன்..!! மீண்டும் அதிரடி தீர்ப்பால் ஆப்பு வைத்த நீதிமன்றம்..!!

Published : Aug 23, 2021, 07:05 PM IST
ஜாமீன் கேட்டு துடிக்கும் மீரா மிதுன்..!! மீண்டும் அதிரடி தீர்ப்பால் ஆப்பு வைத்த நீதிமன்றம்..!!

சுருக்கம்

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது  நண்பர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்த நிலையில், இவர்களது மனுவை நீதிபதி ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.  

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது  நண்பர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்த நிலையில், இவர்களது மனுவை நீதிபதி ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.

நடிகை மீராமிதுன்,  பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை  வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி  கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் இவர்கள் சார்பாக ஜாமீன் கேட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீராமிதுன் தரப்பில் இருந்து மனுதாக்கல் செய்யப்பட்டது.  அதில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி குறிப்பிட்ட  சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், தான் பேசியது தவறு என தெரிந்ததும், தான் பேசியது தவறு என குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

ஆனால், தான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக  புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.  பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். அதே போல் மீரா மிதுனின் ஆண் நண்பரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்... இவர்களுடைய ஜாமீன் மனுவை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.

இதை தொடர்ந்து இன்று மீண்டும் நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த நிலையில், மீரா மிதுன் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால், மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் தொடர்ந்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வாய் தவறி பேசிவிட்டேன், தெரியாமல் பேசிவிட்டேன் என கதறி வரும் மீரா மிதுனுக்கு நீதி மன்றம் மீண்டும் அதிரடி தீர்ப்பால் ஆப்பு வைத்துள்ளது என நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டான்ஸில் தெறிக்க விட்ட தளபதி விஜய் – பாடலில் பட்டைய கிளப்பும் ஸ்டெப்ஸ்; இனி ஒரு பய கமெண்ட் பண்ண முடியாது!
அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!