சமந்தா - நயன்தாராவுடன் ஓரே படிக்கட்டில் ஃபுட் போர்டு அடிக்கும் விஜய் சேதுபதி..! வைரலாகும் வீடியோ..!

Published : Aug 23, 2021, 05:54 PM IST
சமந்தா - நயன்தாராவுடன் ஓரே படிக்கட்டில் ஃபுட் போர்டு அடிக்கும் விஜய் சேதுபதி..! வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு தாற்போது புதுச்சேரியில் நடந்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி, சமந்தா - நயன்தாராவுடன் ஒரே படிக்கட்டில் பயணம் செய்யும் காட்சி கதர்போது வெளியாகி வைரலாகி வருகிறது.  

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு தாற்போது புதுச்சேரியில் நடந்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி, சமந்தா - நயன்தாராவுடன் ஒரே படிக்கட்டில் பயணம் செய்யும் காட்சி கதர்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நயன்தாரா அவரது காதலர் இயக்கத்தில், சுமார் 5 வருடங்களுக்கு பின் நடித்து வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின், பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்ட நிலையில், தாற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் பாண்டிச்சேரி வந்துள்ளனர். இதுவரை நயன்தாரா - சமந்தா இருவரும் சேர்ந்து நடிப்பது போல் ஒரு காட்சி கூட வெளியாகவில்லையே என பீல் பண்ணிய ரசிகர்களை, சந்தோஷப்படுத்தும் விதமாக தாற்போது வீடியோவே வெளியாகியுள்ளது.

இதில் ஒரே படிக்கட்டில் நின்றபடி, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா - சமந்தா ஆகியோர் பயணிக்கின்றனர். இருவருமே ஒரே நிற புடவையில் இருப்பதால், ஓரளவிற்கு இவர்களது கதாபாத்திரம் குறித்து யூகிக்க முடிகிறது. அதாவது சமந்தா - நயன்தாரா இருவருமே ஒரே இடத்தில் வேலை செய்யும் தோழிகள். மிடில் கிளாஸ் பெண்களாக நடிக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி சற்று பெல்ட் வைத்த பேண்ட் போட்டு சற்று வித்தியாசமாகவே இருக்கிறார். தாற்போது இவர்கள் மூவரும் நடிக்கும் காட்சியின் வீடியோ சமூக வலைத்தளத்தை தீயாக சுற்றி வருகிறது.

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன், சமந்தா, மற்றும் விஜய் சேதுபதியை பார்க்க பல ரசிகர்கள் இவர்கள் தங்கி இருக்கும் சொகுசு ஓட்டல் முன்பு திரண்டு வருகிறார்கள். இறுதி கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படப்பிடிப்பை முடித்த உடன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!