திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றி..! அறிக்கை வெளியிட்ட பாரதி ராஜா..!

By manimegalai aFirst Published Aug 23, 2021, 4:30 PM IST
Highlights

திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை புரிந்து கொண்டு,  திரையரங்கம் திறக்க அனுமதி அளித்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, தாற்போது இயக்குனர் இமையம் பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

கொரோனா இரண்டாவது அலை தலைதூக்கியத்தில் இருந்து, சுமார் 4 மாதங்களாக திரையரங்குகள் இயங்காமல் இருந்த நிலையில், இன்று முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கலாம் என, அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் திரையரங்கில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பது போன்ற அறிவுகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை புரிந்து கொண்டு,  திரையரங்கம் திறக்க அனுமதி அளித்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, தாற்போது இயக்குனர் இமையம் பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது... வணக்கம். 

கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின் கருப்பு நாட்களாக்கி விட்டது இந்த கொரானா.  படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டது.  நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக் குறியோடு நகர்ந்த நாட்களில் இப்போது திரையரங்குகளை 23.8.2021 முதல் 50% இருக்கைகளோடு திறந்துகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக்கிறது. 

ஆக்கிரமித்திருக்கும் நோய் விலகி, பல புதிய திரைப்படங்கள் வெளியாகி, திரையரங்குகள் முழுமையான திருவிழாக் கோலம் காண காத்திருக்கிறோம்.

திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளகள் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர்                      திரு. மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு உங்கள் பாசத்திற்குரிய, பாரதி ராஜா என தெரிவித்துள்ளார்.


 

click me!