பிக்பாஸ் ஷிவானிக்கு அடித்த மெகா ஜாக்பாட்... முன்னணி ஹீரோவுக்கு ஜோடி போட தேடி வந்த வாய்ப்பு!

Published : Aug 23, 2021, 03:52 PM IST
பிக்பாஸ் ஷிவானிக்கு அடித்த மெகா ஜாக்பாட்... முன்னணி ஹீரோவுக்கு ஜோடி போட தேடி வந்த வாய்ப்பு!

சுருக்கம்

அப்படி காத்திருந்ததற்கு கைமேல் பலனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்து வரும் விக்ரம் படத்தில் ஹீரோயினாக இணைந்துள்ளார். 

ஷிவானிக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது சீரியல்கள் தான் என்றாலும், தற்போது வெள்ளித்திரை பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் அதிக முனைப்பு காட்டி வந்தார். சில இயக்குனர்கள் இவரிடம் கதை கூறி வந்தாலும், மனதிற்கு பிடித்த கதையையும், நல்ல கருத்துள்ள படங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து, முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என கண்ணும் கருத்துமாக இருந்தார். 

இதற்காக இவர், திரையுலகை சேர்ந்த சில நண்பர்கள் கூடவும் நிறைய ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. எனவே தான் கடந்த சில மாதங்களாக, கண்ணை கட்டும் அளவுக்கு கவர்ச்சியை வாரி இறக்காமல், அளவான கவர்ச்சியை ரசிக்கும் படி காட்டி புகைப்படம் வெளியிட்டு வந்தாராம். முன்பை விட இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த பின்னர் வெளியிடும் புகைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் அதிகம் பார்க்கப்பட்டு, ரசிக்கப்பட்டு வருகிறது. 

அதேபோல் இயக்குனர்கள் கூறி வரும் கதைகளை எல்லாம் ஏற்காமல், தனக்கு அழுத்தமான கதாபாத்திரமும், முக்கியமாக முன்னணி நடிகர்கள் படம் என்றால் மட்டுமே ஓகே சொல்லுவேன் என கூறிவந்தார். இதனால் கடந்த ஒரு வருடமாகவே வந்த வாய்ப்புகளையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு பொறுமையாக காத்திருந்தார். அப்படி காத்திருந்ததற்கு கைமேல் பலனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்து வரும் விக்ரம் படத்தில் ஹீரோயினாக இணைந்துள்ளார். அதில் இப்போது சூப்பர் சர்ப்ரைஸாக  விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக விக்ரம் படத்தில் கமலுக்கு மகனாக நடிக்கும் காளிதாஸுக்கு ஜோடியாக ஷிவானி நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?