புறக்கணிக்கப்படுகிறாரா தெருக்குரல் அறிவு? ஆதங்கத்தை வெளிப்படுத்திய பா.ரஞ்சித்..!

By manimegalai aFirst Published Aug 23, 2021, 3:08 PM IST
Highlights

'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' என வரிசையாக அடுத்தடுத்த படைகளை இயக்கி வரும் பா.ரஞ்சித், ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டைப்படத்தில் பாடலாசிரியர் அறிவு படம் இடம்பெறாததற்கு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' என வரிசையாக அடுத்தடுத்த படைகளை இயக்கி வரும் பா.ரஞ்சித், ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டைப்படத்தில் பாடலாசிரியர் அறிவு படம் இடம்பெறாததற்கு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் பா.ராஞ்சித் குறிப்பிட்ட சமூகத்தை பற்றியே படம் இயக்கி வருகிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அனைவரது எண்ணத்தையும் பொய்யாக்கும் விதமாக, சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை' படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்த படத்தில் நடித்துள்ள அனைவருக்குமே ஒரு சிறந்த திருப்பு முனையாக இப்படம் அமைந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சர்வதேச இசை இதழ்களில் ஒன்றான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் 'எஞ்சாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் மற்றும் 'நீயா ஒளி' பாடலின் சாதனையை பாராட்டும் விதமாக, பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் இரண்டு பாடல்களின் பாடலாசிரியரும், எஞ்சாய் எஞ்சாமி பாடலை தீ-க்கு இணையாக பாடி புகழ்பெற்ற பாடகர், தெருக்குரல் அறிவு புகைப்படம் இடம்பெற வில்லை. அவரது புகைப்படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம்பெறாததற்கான காரணம் புரியவில்லை என இயக்குனர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலின் ஒவ்வொரு சாதனையின் போதும், தீ-யை மட்டுமே முன்னிறுத்துவதாகவும், தெருக்குரல் அறிவின் திறமைகள் மறைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுவந்த நிலையில், மீண்டும் ஒரு முறை அவரது அடையாளம் மறைக்கப்படுவதாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

இவரது ட்விட்டர் பதிவு தாற்போது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

, the lyricist of and singer as well as lyricist of has once again been invisiblised. and is it so difficult to understand that the lyrics of both songs challenges this erasure of public acknowledgement? https://t.co/jqLjfS9nwY

— pa.ranjith (@beemji)

click me!