
'கே.ஜி.எஃப்' என்கிற அதிரடி ஆக்ஷன் கதையை இயக்கி, உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் பிரஷான்த் நீல். இந்த படத்தின் இரண்டாவது பாகத்தையும் இயக்கி முடித்துள்ள நிலையில், தாற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கியுள்ளார். தாற்போது இந்த படத்தில் நடிக்கும் ஜெகபதி பாபுவின் வித்தியாசமான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது 'யுவரத்னா' மற்றும் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்த படத்தின் தயாரிப்பை சமீபத்தில் அறிவித்தது.
தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கவுள்ள 'சலார்' என்கிற படத்தை, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாரிக்க உள்ளனர். இந்த படத்தையும் 'கே.ஜி.எஃப்' படத்தின் மூலம் ரசிகர்களை அசரவைத்த இயக்குநர் பிரஷான்த் நீல் தான் இயக்குகிறார்.
பிரமாண்ட பொருட்செலவில் உருகாகி வரும் இந்த படத்தில் படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களாகவே படு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்பதை படக்குழு அறிவித்த நிலையில், தாற்போது இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 'சலார்' படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கும் ஜெகபதி பாபுவின், மிரட்டலான தோற்றம் குறித்த போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, இப்படத்தில் ராஜமன்னார் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த போஸ்டர் தாற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.