இயக்குனர் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்த பிரபல தயாரிப்பாளர்..! மீண்டும் கொழுந்து விட்டு எரியும் பிரச்சனை..!

By manimegalai aFirst Published Aug 24, 2021, 7:19 PM IST
Highlights

ஏற்கனவே 'இந்தியன் 2 ' பட விவகாரம் தொடர்பாக லைகா நிறுவனம் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்த நிலையில், அதை தொடர்ந்து அந்நியன் பட விவகாரம் தொடர்பாக, ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
 

ஏற்கனவே 'இந்தியன் 2 ' பட விவகாரம் தொடர்பாக லைகா நிறுவனம் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்த நிலையில், அதை தொடர்ந்து அந்நியன் பட விவகாரம் தொடர்பாக, ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர், 'அந்நியன்' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளது குறித்து ஏற்கனவே, அதிகார பூர்வ அறிவிப்பை வெளியான பொது, 'அந்நியன்' படத்தின் கதையை சுஜாதாவிடம் இருந்து பணம் கொடுத்து தான் வாங்கி வைத்திருப்பதாகவும், தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்த கதையை ஷங்கர் 'ரீமேக்' செய்ய உள்ளதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் பிரமாண்ட இயக்குனர் மீது குற்றம் சாட்டினார்.

இதையடுத்து இதற்க்கு, இயக்குனர் ஷங்கர் தரப்பில் இருந்து  உங்கள் கடிதத்தை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன்.  'அந்நியன்' திரைப்படத்தின் கதைக்களம் உங்களுக்கு சொந்தமானது என்று கூறி இருந்தது தான் அதற்க்கு காரணம். இந்த திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் ஸ்கிரிப்ட் மற்றும் கதைக்களம் எனக்கு மட்டுமே சொந்தமானது என்பது தெரியும்.  கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் என்ற குறிச்சொல்லுடன் என் பெயர் படத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  அதே போல் எந்தவொரு நபரையும் நான் ஸ்கிரிப்ட் அல்லது திரைக்கதை எழுத அனுமதிக்கவில்லை. 

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிய குறிப்பைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன், ஏனென்றால் அவர் படத்திற்கான உரையாடல்களை எழுதுவதற்கு மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதற்கேட்ப பணத்தையும் பெற்று கொண்டார். அவர் எந்த வகையிலும் ஸ்கிரிப்ட், திரைக்கதை அல்லது கதாபாத்திரத்தில் ஈடுபடவில்லை, உரையாடல் எழுத்தாளராக அவரது ஈடுபாட்டைத் தாண்டி எந்த பங்கும் அவருக்கு இந்த கதையில் இல்லை, என தெரிவித்திருந்தார்.

மேலும் ஸ்கிரிப்ட் என்னுடையதாக இருப்பதால், நான் பொருத்தமாக கருதும் எந்த வகையிலும் அதைப் பயன்படுத்த எனக்கு முற்றிலும் உரிமை உண்டு. இந்த உரிமைகள் உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்படாததால், “அந்நியன்”  ஹிந்தி ரீமேக் செய்வது குறித்து உங்களுக்கும் / உங்கள் நிறுவனத்திற்கு நான் அறிவிக்கவில்லை. என்னிடமிருந்து எழுத்துப்பூர்வமாக எந்த ஒரு உரிமையும் பெறாத நிலையில் , "கதைக்களம்" உங்களுடையது என்று உங்களால் கூற முடியாது.

'அந்நியன்' படத்தின் வெற்றியில் இருந்து தயாரிப்பாளராக நீங்கள் கணிசமாக தொகையை பெற்றுள்ளீர்கள், மேலும் உங்களுடனான எந்த தொடர்பும் இல்லாத எனது எதிர்கால முயற்சிகளிலும் கூட உங்களை அநியாயமாக வளப்படுத்த முயற்சிக்கிறீர்கள். இனியாவது இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துக்களை கூறுவதை நிறுத்துவீர்கள் என நம்புகிறேன். மேலும் இந்த பதில் பாரபட்சமின்றி வழங்கப்படுகிறது. எனது எதிர்கால திட்டங்களை பாதிக்க தேவையில்லாமல் முயற்சிக்க வேண்டாம்.  இதுபோன்ற சட்டவிரோத உரிமைகோரல்களுக்கு ஒரு இயக்குனர் மற்றும் எழுத்தாளர் என்ற எனது உண்மையான நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக இத்தனை தெரிவித்துள்ளதாக ஷங்கர் தன்னுடைய தரப்பு விளக்கத்தை கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது இந்த பிரச்சனை மீண்டும் கொழுந்து விட்டு எரிய துவங்கியுள்ளது ஷங்கர் மீது ஆஸ்கார் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 'அந்நியன்' படத்தின் காப்பிரைட் தன்னிடம் இருக்கும் போது அதனை தனக்கு தெரியாமல் ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளை ஷங்கர் செய்து வருவதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!