தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய்யாக அறிமுகமான, நடிகர் மாதவன் தற்போது தமிழ், மற்றும் இந்தியில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாக கூறியுள்ளார்.
நடிகர் மாதவன்:
undefined
நடிகர் மாதவன் ஆரம்ப காலத்தில் சில விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர். பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'அலைபாயுதே' படத்தில் நடித்தார். இந்த படம் மிகபெரிய வெற்றிப்பெறவே இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
தமிழ் மட்டும் இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர். காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சில காலம், நடிப்புக்கு இடைவேளை விட்டிருந்தார். கால் முழுமையாக குணமானதும், இவர் ரீஎன்ட்ரி கொடுத்த திரைப்படம் 'இறுதி சுற்றி' இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. மேலும் கடந்த ஆண்டு வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இனவெறியில் சிக்கிய மாதவன்:
மாதவன் தமிழ் குடும்பத்தில் பிறந்து பீகாரில் வளர்ந்தவர், அதனால், அவரை அங்கு மதராஸி என்று பிரித்து தான் அழைப்பார்களாம். இதனால் இனவெறி அங்கு மாதவனுக்கும் அரங்கேறியது.
20 வயது வரை தன்னை கொஞ்சம் ஒதுக்கிய தான் வைத்ததாகவும், எதற்காக என்னை வேறுப்படுத்தி பார்த்தார்கள் என்பது இன்று வரை தெரியவில்லை என்று மனவேதனையோடு மாதவன் கூறியுள்ளார்.