
சமீப காலமாக பிரபலங்களின் வாரிசுகள் பலர் விளையாட்டு துறை மீது அதிக ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர். அந்த வகையில், பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த், கடந்த ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார்.
இதை தொடர்ந்து தற்போது, தேசிய அளவில் ஜூனியர் பிரிவில் நடத்தப்பட்ட நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு, 3 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் மாதவன், அனைவருடைய ஆசீர்வாதமும், வாழ்த்துக்களும் இருந்ததால் தான் தன்னுடைய மகன் இந்த சாதனையை செய்துள்ளார். இதை நினைத்து பெருமை படுவதாக கூறியுள்ளார்.
ஆசியாலும், வாழ்த்துக்களாலும் தனது மகன் இந்த சாதனையை செய்துள்ளதாகவும், இது தனக்கு பெருமை தரும் வகையில் இருப்பதாகவும் மாதவன் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகனின் அடுத்த இலக்கு ஆசிய விளையாட்டு போட்டி என மாதவன் தெரிவித்துள்ளார். இதற்கு பலர் மாதவனின் மகன் வேதாந்த்துக்கு பலர் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.