Madhavan : அன்றும்... இன்றும் அதே காதலுடன் - திருமண நாளில் மனைவியின் போட்டோவை பகிர்ந்து உருகிய மாதவன்

By Asianet Tamil cinemaFirst Published Jun 7, 2022, 10:45 AM IST
Highlights

Madhavan : நடிகர் மாதவன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் வருகிற ஜூலை 1-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

மணிரத்னத்தின் அலைபாயுதே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி சாக்லேட் பாய்யாக வலம் வந்தவர் மாதவன். இவர் கடந்த 1999-ம் ஆண்டு சரிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதி தங்களது 23-வது திருமண நாளை நேற்று கொண்டாடியது. இதையொட்டி நடிகர் மாதவன் தனது மனைவி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதன்படி இன்ஸ்டாகிராமின் தனது மனைவியுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் மாதவன், அதில் கோர்ட் சூட் அணிந்து அவர் ஸ்டைலாக நிற்க அவருக்கு அருகில் அவரது மனைவி சரிதா, சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார். மேலும் அதில் “முன்னெப்போதும் இல்லாத அளவு இப்போது நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் அவரது மனைவி சரிதாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் மாதவனை கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து அன்றும் இன்றும் அதே காதலுடன் இருப்பதாக பதிவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sarita Madhavan (@msaru15)

23-வது திருமண நாளை கொண்டாடிய மாதவன் - சரிதா தம்பதியினருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. நடிகர் மாதவன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் வருகிற ஜூலை 1-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... O2 Release Date : திருமணம் முடிந்த சில நாட்களிலேயே... நேரடியாக OTT-யில் ரிலீசாகும் நயன்தாராவின் திரில்லர் படம்

click me!