O2 Release Date : திருமணம் முடிந்த சில நாட்களிலேயே... நேரடியாக OTT-யில் ரிலீசாகும் நயன்தாராவின் திரில்லர் படம்

By Asianet Tamil cinemaFirst Published Jun 7, 2022, 10:00 AM IST
Highlights

Nayanthara's O2 OTT Release Date : கைதி, தீரன் போன்ற படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் நயன்தாராவின் ஓ2 படத்தையும் தயாரித்துள்ளது.

நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் ஓ2 (O2). இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜி.எஸ்.விக்னேஷ் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. கைதி, தீரன் போன்ற படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து உள்ளார். ஓ2 படத்தில் நடிகை நயன்தாரா 8 வயது சிறுவனுக்கு தாயாக நடித்துள்ளார். நயன்தாராவின் மகன் வேடத்தில் யூடியூப் புகழ் ரித்விக் நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இப்படத்தின் கதைப்படி நடிகை நயன்தாரா தனது மகனுடன் பேருந்தில் செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்குகிறார். அவரது மகனுக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதால் எப்போதும் அவனிடம் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று இருக்கும், விபத்தில் சிக்கி பேருந்து மண்ணுக்குள் புதைந்த பின் சக பயணிகள், அந்த ஆக்சிஜன் சிலிண்டரை குறிவைக்கின்றனர். அவர்களிடம் இருந்து நடிகை நயன்தாரா தனது மகனை எப்படி காப்பாற்றினார் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படமாக இந்த ஓ2 தயாராகி உள்ளது.

இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. விறுவிறுப்பான பின்னணி இசையுடன் திகிலூட்டும் காட்சிகளுடன் கூடிய இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 17ந் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற ஜூன் 9-ந் தேதி நடிகை நயன்தாராவின் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Don : டான் எனக்கு வந்த படம்... அந்த ஒரு காரணத்துக்காக நடிக்க மறுத்தேன் - சக்சஸ் மீட்டில் ஷாக் கொடுத்த உதயநிதி

click me!