Lokesh kanagaraj : கமல் கைப்பட எழுதிய ‘லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்’.... லோகேஷின் எமோஷனல் பதிவு

Published : Jun 07, 2022, 08:30 AM ISTUpdated : Jun 07, 2022, 09:23 AM IST
Lokesh kanagaraj : கமல் கைப்பட எழுதிய ‘லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்’.... லோகேஷின் எமோஷனல் பதிவு

சுருக்கம்

Lokesh kanagaraj : கமல்ஹாசன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ், லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர் என குறிப்பிட்டுள்ளார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வரும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் எழுதி உள்ள கடிதம் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ், லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கடிதத்தை படிக்கும்போது எவ்வளவு எமோஷனல் ஆனேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது நன்றி ஆண்டவரே என பதிவிட்டுள்ளார். 

கமல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது : “அன்பு லோகேஷ், பெயருக்கு முன் “திரு” போடாமல் விட்டது விபத்தல்ல. திரு.கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டுவிட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைகளுக்கான, பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும், பொது வெளியில்.

என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம்.

உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உள்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம், யூடியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு. லோகேஷ் கனகராஜ், தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்துக் கொள்ளலாம். இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள். அயராது... விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும். உங்கள் நான்” என அந்த கடிதத்தில் கமல்ஹாசன் எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள்... விக்ரமில் விஜய் சேதுபதியின் ‘சந்தனம்’ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா... வெளியான ஷாக்கிங் தகவல்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!