
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரும், பாடகருமான கோட்டா சீனிவாச ராவ், இதுவரை தெலுங்கில் 250 திற்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடித்து பிரபலமானவர். 1999 - 2004 வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.
இவருடைய நடிப்பை பார்த்து வியர்ந்து, இவரை தமிழில் நடிகர் விக்ரம் நடித்த 'சாமி' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஹரி. இந்த படத்தில் விக்ரமை விட வில்லனாக நடித்த இவருடைய நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழிலும் நிறைய படங்களில் நடிக்க வாய்புகள் கிடைத்தது, இதுவரை தமிழில் மட்டும் 40 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பெரும்பாலும் அதிக படங்களில் நடிப்பதில்லை, தன்னை தேடி வரும் வாய்ப்பை தவிர்த்து வருகிறார்.
இது குறித்து சமீபத்தில் கோட்டா சீனிவாச ராவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, கண்ணீருடன் பதில் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு, தன்னுடைய மகனுக்கு, வெளிநாட்டில் இருந்து பிரத்தேயகமாக வரவழைத்து வாங்கிக்கொடுத்த, பைக்கில் அவர் ஐதராபத்தில் உலா வந்த போது லாரி மோதி இறந்துவிட்டார்.
இவரின் இழப்பை தாங்க முடியாமலும், இதிலிருந்து மீள முடியாமல் தான் தவித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் தன்னை தேடி வரும் படங்களில் கூட கவனம் செலுத்த முடியவில்லை என கண்ணீருடன் கூறியுள்ளார்.
மெல்ல மெல்ல தன்னுடைய மகனின் நினைவில் இருந்து, மீண்டு வரும் இவர் விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள, காலா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.