'லிப்ட்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிக்பாஸ் கவின் நடித்துள்ள 'டாடா' திரைப்படம் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படங்களை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கவின்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' மற்றும் 'சரவணன் மீனாட்சி' ஆகிய சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் கவின். சீரியலை தொடர்ந்து பல வருடமாக திரைப்படங்களில் நடிக்க போராடி வருகிறார். பல்வேறு பிரச்சனைகளை கடந்து இவர் நடித்து ஒரு சில படங்களும் வெளியாகாமல் போனது. இது குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொண்ட போது மிகவும் உருக்கமாக பேசி இருந்தார்.
வெள்ளித்திரையில் பட வாய்ப்பை கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட கவின், இலங்கை செய்தி வாசிப்பாளராக லாஸ்லியா மீது காதல் வாய்ப்பட்டார். பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது... தெய்வீக காதல் மழை பொழிந்த இருவரும், வெளியே வந்தபின்னர் அது குறித்து பேச கூட மறுத்துவிட்டனர். மேலும் தற்போது இருவருமே, தங்களுடைய நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே கவின் நடிப்பில் வெளியான 'லிப்ட்' திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பீஸ்ட் பட நடிகை அபர்ணாதாஸ் உடன் டாடா படத்தில் இணைந்து நடித்துள்ளார். கணேஷ் கே பாபு இயக்கி உள்ள இப்படத்தை. அம்பேத்குமார் என்பவர் தயாரித்துள்ளார். நேற்று தமிழகத்தில் சுமார் 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.
இந்த படத்தில் ஒரு குழந்தையின் தந்தையாக கவின் நடித்துள்ளார். அதேபோல் காதல், காமெடி, எமோஷன், என அனைத்தும் கலந்த ஒரு ஃபீல் குட் மூவியாக இப்படம் இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் தன்னுடைய மானசீக குருவாக நினைக்கும் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
வடிவேலுவை தொடர்ந்து பிரபல காமெடி நடிகர் நடிக்க தடையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!
கவினின் திரையுலக பயணத்திற்கு ஆரம்பமாக இருந்தது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதன் மூலம் கிடைத்த வரவேற்பு தான் அவரை தற்போது திரையுலகில் கதாநாயகனாக நிலைக்க வைத்துள்ளது. எனவே தனக்கு அது போன்ற ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கிய கமலஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்று தன்னுடைய twitter பக்கத்தில் கோவிலுக்கு சென்று வந்ததாக கவின் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனை ஆண்டவர் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், அவர் இருக்கும் இடத்தை கோவில் என குறிப்பிட்டு கவின் இந்த பதிவை போட்டுள்ளார். இந்த பதிவு மட்டும் இன்றி, புகைப்படமும் வைரலாகி வருகிறது.
Went to temple today :) sir 🙏🏼🙏🏼🙏🏼♥️ pic.twitter.com/Oz6A62Wp4s
— Kavin (@Kavin_m_0431)