
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி, நடிப்பை தாண்டி பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக நம் நாட்டின் முதுகெலும்பாக பார்க்கப்படும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உதவும் விதத்தில், 'விவசாயி' என்கிற அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் ஒவ்வொரு வருடமும், விவசாயிகள் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவது மட்டும் இன்றி, விவாசாயிகளை கௌரவிக்கும் விதமாக விழாக்களும் முன்னெடுக்க படுகிறது.
இதை தொடர்ந்து தற்போது காவல் துறை சார்பில் நடைபெற்ற போதை பொருளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். மெரினா கடற்கரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது, ”இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.
பள்ளிகளுக்கு அருகே கூட போதைப்பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள் தான். ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியும். இது சீரியஸான விஷயம். போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்” என கார்த்தி பேசினார்.
உச்சகட்ட அதிர்ச்சி..! நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில்... ஒரே நாளில் ஏற்பட்ட அடுத்தடுத்த மரணங்கள்!
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.