ஆழ்துளைக் கிணறுகளை தேடி மூடுங்கள்... நடிகர் கார்த்தி ஆதங்கம்!

By Asianet TamilFirst Published Oct 27, 2019, 10:30 PM IST
Highlights

"எத்தனை ஆண்டுகள்தான் இப்படி ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறோம் எனத் தெரியவில்லை. இந்த சம்பவங்கள் தொடராமல் இருக்க மிகவும் வலுவான சட்டம் தேவை. 

ஆழ்துளைக் கிணறுகளைத் தேடி மூட வேண்டும் என்று நடிகர் கார்த்தி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து போராடி வருகிறது. அந்தக் குழந்தையை மீட்பதற்காக அரசு எந்திரங்களும் போராடிவருகின்றன. ஆழ்துளை கிணற்றில் விழுந்து 52 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் மீட்பு பணிகள்  தொடர்கின்றன. சிறுவன் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என மதங்களைத் தாண்டி பிரார்த்தனைகள் நடைபெற்றுவருகின்றன. தீபாவளி திருநாளை தாண்டி தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் தங்களுடையை பிரார்த்தனையையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்திவருகிறார்கள்.
இந்நிலையில் குழந்தை சுர்ஜித் தொடர்பாக நடிகர் கார்த்தியும் ட்விட்டரில் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், "எத்தனை ஆண்டுகள்தான் இப்படி ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறோம் எனத் தெரியவில்லை. இந்த சம்பவங்கள் தொடராமல் இருக்க மிகவும் வலுவான சட்டம் தேவை. முதலில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைத் தேடி மூட வேண்டும். சுர்ஜித் மீண்டும் அவரது அம்மா கையில் சிரித்துக் கொண்டு இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்  நடிகர் கார்த்தி.

click me!