விவசாயிகளுக்காக நடிகர் கார்த்தி முதலமைச்சரிடம் வைத்த முக்கிய கோரிக்கை!

Published : Mar 22, 2023, 04:34 PM IST
விவசாயிகளுக்காக நடிகர் கார்த்தி முதலமைச்சரிடம் வைத்த முக்கிய கோரிக்கை!

சுருக்கம்

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் கார்த்தி இதற்கு நன்றி தெரிவித்து, முக்கிய கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.  

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள  முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் எம்.ஆர்.பன்னீர் ஆகியோருக்கு நடிகரும்,  உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி நன்றி தெரிவித்துள்ளது மட்டும் இன்றி விவசாயிங்கள் நலனுக்காக முக்கிய கோரிக்கை ஒரே, தன்னுடைய அறிக்கை மூலம் வலியுறுத்தி உள்ளார். 

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம்.


 
வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு  எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய  வேளாண் பட்ஜெட்டில்  முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிலோ கணக்கில் தங்க... வைர நகைகளுடன் ... மகாராணி போல் ஜொலிக்கும் நயன்தாரா! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும்  அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு , மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணம்..? தீயாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ!

இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால், அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம் என கார்த்தி தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெடித்த உண்மை! மாமனாரின் தலையில் போட அண்டாவை தூக்கிய சரவணன்!
மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!