எத்தனை மிமிக்ரி ஆர்டிஸ்ட் வந்தாலும், நீதான் நம்பர் 1 - கோவை குணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மதுரை முத்து

Published : Mar 22, 2023, 10:05 AM IST
எத்தனை மிமிக்ரி ஆர்டிஸ்ட் வந்தாலும், நீதான் நம்பர் 1 - கோவை குணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மதுரை முத்து

சுருக்கம்

கோவை குணா உடன் சேர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய மதுரை முத்து அவரது மறைவுக்கு கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் பல குரல் மன்னனாக திகழ்ந்து வந்தவர் கோவை குணா. இவர் அசத்தப் போவது யாரு, கலக்கப்போவது யாரு போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மிமிக்ரி செய்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டில் வின்னரும் கோவை குணா தான்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் பல்வேறு கலந்துகொண்டு தனது மிமிக்ரி மூலம் கலக்கி வந்த கோவை குணா, ஜனகராஜ், சுருளிராஜன், நம்பியார், அசோகன் என பல்வேறு நடிகர்களின் குரல்களில் தத்ரூபமாக பேசி அசத்தி வந்தார். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த சில தினங்களாக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இதையும் படியுங்கள்... ரஜினி மகள் வீட்டில் அபேஸ் பண்ணிய நகையை வைத்து ரூ.1 கோடிக்கு சொத்து வாங்கிய பணிப்பெண் - வெளிவந்த திடுக் தகவல்

இந்த நிலையில், நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை குணாவின் மறைவு சின்னத்திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை குணா உடன் சேர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய மதுரை முத்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை முத்து பதிவிட்டுள்ளதாவது : "20 ஆண்டுகளில் எத்தனையோ கலைஞர்களை பார்த்து விட்டேன் நீங்கள்தான் நம்பர் ஒன். இன்னும் எத்தனை பல குரல் கலைஞர்கள் வந்தாலும் கோவை குணாவிற்கு நிகராகாது. இவரும் நானும் கலக்கப்போவது யாரு பாகம் ஒன்றில் வெற்றியாளராக வந்தாலும். எல்லா கலைஞர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இளநீரைப் போன்று தூய்மையான அன்பிற்கு உகந்த மனிதர். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... 4 நிமிஷம் ஆட்டி எடுத்துருச்சு... சுனாமிக்கு பின் இப்படி ஒரு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக குஷ்பு டுவிட்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் பட்டியல்: லேட்டஸ்ட் கோலிவுட் அப்டேட்!
2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?