4 நிமிஷம் ஆட்டி எடுத்துருச்சு... சுனாமிக்கு பின் இப்படி ஒரு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக குஷ்பு டுவிட்

Published : Mar 22, 2023, 09:31 AM IST
4 நிமிஷம் ஆட்டி எடுத்துருச்சு... சுனாமிக்கு பின் இப்படி ஒரு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக குஷ்பு டுவிட்

சுருக்கம்

நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சாலையில் வந்து தஞ்சமடைந்ததாக குறிப்பிட்டு அப்போது எடுத்த புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. 

இந்தியாவின் வடமாநிலங்களான டெல்லி, காஷ்மீர், பஞ்சாப், ஹரியானாவில் நேற்று இரவு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பொதுமக்கள் சாலையில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று இரவு 10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் தான் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் உணரப்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக தற்போது கட்சிப் பணிக்காக டெல்லியில் தங்கி இருந்த நடிகை குஷ்புவும் இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி சுமார் 4 நிமிடத்திற்கு அந்த நிலநடுக்கம் நீடித்ததாகவும், அப்போது வீட்டில் இருந்த மின் விசிறியும், மின் விளக்குகளும் தானாக அசைந்ததாகவும், அதேபோல் சோஃபாக்களும் நகர்ந்ததை அடுத்து தான் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார் குஷ்பு. 

இதையும் படியுங்கள்... இந்த மனசு யாருக்கு வரும்... தசரா படக்குழுவுக்கு ஒரு கிலோ தங்கத்தை பரிசாக வாரி வழங்கிய கீர்த்தி சுரேஷ்

நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சாலையில் வந்து தஞ்சமடைந்ததாக குறிப்பிட்டு அப்போது எடுத்த புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. சுனாமிக்கு பின் தற்போது தான் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளதாக நடிகை குஷ்பு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியா மட்டுமின்றி, உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. இந்தியாவின் வடமாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து டுவிட்டரில் earthquake என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ரஜினி மகள் வீட்டில் அபேஸ் பண்ணிய நகையை வைத்து ரூ.1 கோடிக்கு சொத்து வாங்கிய பணிப்பெண் - வெளிவந்த திடுக் தகவல்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!