சினிமா பயணத்தில் 17வது ஆண்டு.. முன்னணி நாயகனாக அசத்தும் கார்த்தி - ஹிட்டடித்த அவரின் Top 5 Movies இதோ!

Ansgar R |  
Published : Feb 23, 2024, 05:21 PM ISTUpdated : Feb 23, 2024, 05:26 PM IST
சினிமா பயணத்தில் 17வது ஆண்டு.. முன்னணி நாயகனாக அசத்தும் கார்த்தி - ஹிட்டடித்த அவரின் Top 5 Movies இதோ!

சுருக்கம்

17 Years of Karthi : ஆயுத எழுத்து திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும், கடத்த 2007ம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் திரைப்படம் மூலம் ஹீரோவாக உருவானவர் தான் கார்த்தி.

பிரபல நடிகரின் தம்பியாக தமிழ் திரையுலகில் களமிறங்கிருந்தாலும், தன்னுடைய திறமையால் இன்று சிறந்த நடிகராக வளர்ந்து நிற்கும் கார்த்தி நடிப்பில் வெளியான மக்களின் பெரிய அளவிலான ஆதரவை பெற்ற 5 படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். நிச்சயம் இந்த டாப் 5 படங்களில் அவருடைய முதல் படமான பருத்தி வீரன் நிச்சயம் இருக்கும். முதல் படத்திலேயே நேர்த்தியான தனது நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார் அவர். 

பருத்திவீரன் படத்தை தொடர்ந்து சுமார் மூன்று ஆண்டு காலம் காத்திருந்து கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "ஆயிரத்தில் ஒருவன்". இந்த திரைப்படம் வெளியானபோது பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், இப்பொழுது கொண்டாடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது ஆயிரத்தில் ஒருவன். "முத்து" என்கின்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கார்த்தி.

“என் அப்பாவால தான் என் வாழ்க்கையே நாசமா போச்சு.. அவரு பேச்சை கேட்டதால்.. ” வனிதா விஜயகுமார் உருக்கம்..

சிவா இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான "சிறுத்தை" திரைப்படம், கார்த்திக்கு கமர்சியலாக ஹிட்டான ஒரு மிகச்சிறந்த திரைப்படம். ரத்தினவேல் பாண்டியன் மற்றும் ராக்கெட் ராஜா என்ற இரு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளைகொண்டார் கார்த்தி.

கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் உருவான "மெட்ராஸ்" திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைகளத்தோடு உருவான திரைப்படம். மக்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், விமர்சன ரீதியாகவும் கார்த்தி இந்த திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றார்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான மிகப்பெரிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் கார்த்தி நடித்த அந்த வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரம் தான் என்பது அனைவரும் அறிந்ததே. வந்தியதேவனாகவே திரைப்படத்தில் வாழ்ந்து மக்கள் மனதில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார் கார்த்தி.

'கோலி சோடா' படத்தில் நடித்த சீதாவா இது! ஆளை மயக்கும் அழகு தேவதையாக மாறிய ரீசென்ட் போட்டோஸ் இதோ!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்