மனிதத் தன்மையற்ற செயலுக்கு நீதி வேண்டும்... சாத்தான்குளம் கொடூரத்திற்கு எதிராக கொந்தளித்த ஜெயம் ரவி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 26, 2020, 12:31 PM IST
Highlights

இந்நிலையில் தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை கண்டித்து முன்னணி நடிகர் ஜெயம் ரவி கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் கடைகள் என எதுவும் இரவு 8 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை. இந்த நிலையில் கடந்த 19ந் தேதி சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகே கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதா? என்பதை காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உறுதி செய்ய வந்துள்ளார். அப்போது ஜெயராஜ் என்பவர் தனது செல்போன் கடையை மூடாமல் திறந்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. அப்போது கடையை உடனடியாக மூடுமாறு பாலகிருஷ்ணன், ஜெயராஜை கூறியுள்ளார்.

 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... ஹன்சிகா அசத்தல் கவர்ச்சியை பார்த்து மெழுகாய் உருகும் ரசிகர்கள்...!

அப்போது ஜெயராஜுக்கும் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் போலீசையே எதிர்த்து பேசுறீயா? எனக்கூறி, ஜெயராஜை சட்டையைப் பிடித்து இழுத்து காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். இதைப்பார்த்த பென்னீஸ் ஏன் எங்க அப்பாவை இப்படி இழுத்து போறீங்க? என கேட்க அவரையும் காவல்நிலையம் வா எனக்கூறிவிட்டு சென்றுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த பென்னீஸ் தனது அப்பாவின் நிலையை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே அவரையும் போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர். 

 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், கோவில்பட்டி கிளை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு முதலில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பென்னீஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். மறுநாள் அவரது தந்தை ஜெயராஜ் மரணமடைந்தார். காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிபிஐ விசாரணைக்கோரியும், சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 தலைமைக் காவலர்கள் மீது அலுவல் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: 

இந்நிலையில் தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை கண்டித்து முன்னணி நடிகர் ஜெயம் ரவி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், சட்டத்தை விட உயர்ந்தவர் எவரும் இல்லை.மனிதத் தன்மையற்றை இந்த செயலுக்கு நீதி வேண்டும் என #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார். 

No one is above the law, justice must be done for this inhuman act.

— Jayam Ravi (@actor_jayamravi)
click me!