’பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில்.. இயக்குனருக்கு காஸ்டலி கிஃப்ட் கொடுத்த நடிகர் ஹரிஷ் கல்யாண்!

Published : Dec 16, 2023, 03:11 PM IST
’பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில்.. இயக்குனருக்கு காஸ்டலி கிஃப்ட் கொடுத்த நடிகர் ஹரிஷ் கல்யாண்!

சுருக்கம்

’பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.  

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் வெளியான ’பார்க்கிங்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு எளிமையான பிரச்னையை... ஆழமான கதைக்களத்துடன், அனைவருக்கும் ரிலேட் ஆகும் வகையில் இந்த படத்தை இயக்கி இருந்தார் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஒரு வாரத்தை கடந்தும்.. பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் படத்தின் சக்ஸஸ் மீட் இன்று நடந்தது. இதில் இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

'விடாமுயற்சி' படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை.. மிகப் பெரிய தொகைக்கு கைப்பற்றிய நிறுவனங்கள்?

இந்நிலையில், படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசிய... நடிகர் ஹரிஷ் கல்யாண், “படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மீடியாவுக்கு நன்றி. இதன் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம். இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்த அன்பால்தான் இங்கு நிற்கிறோம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சினிஸ், சுதன் இவர்களுக்கும் நன்றி. வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார். படத்தில் வேலை பார்த்த எம்.எஸ். பாஸ்கர் சார், இந்துஜா, பிரார்த்தனா அனைவருக்கும் நன்றி. 

Bigg Boss Eviction: ஜஸ்ட் மிஸ்.. தப்பிய நிக்சன்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா?

இந்த வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியுள்ளது” என்றார். மேலும் இப்படி ஒரு வெற்றிப்படத்தில் நடிக்க தன்னை தேர்வு செய்த இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!