- Home
- Gallery
- 'விடாமுயற்சி' படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை.. மிகப் பெரிய தொகைக்கு கைப்பற்றிய நிறுவனங்கள்?
'விடாமுயற்சி' படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை.. மிகப் பெரிய தொகைக்கு கைப்பற்றிய நிறுவனங்கள்?
அஜித் நடிப்பில் உருவாகி வரும், 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே, இப்படத்தின் பிசினஸ் துவங்கி விட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தல அஜித் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனிய இயக்கத்தில், தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் நடந்து முடிந்த நிலையில், இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் அஜர்பைஜான் சென்றுள்ளது படக்குழு.
முதல் கட்ட படப்பிடிப்பில், நடிகை த்ரிஷா மற்றும் அஜித் சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அஜித், அர்ஜுன், ஆரவ், ரெஜினா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
KPY Bala: விரல் உடைந்த நிலையில் கையில் கட்டோடு விஜய் டிவி KPY பாலா..! என்ன ஆச்சு? பதறிய ரசிகர்கள்.!
நேற்றைய தினம், 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் அஜித் போட்டோகிராஃபராக மாறி, இயக்குனர் மகிழ் திருமேனி, அர்ஜூன், ரெஜினா, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஆகியோரை படம் பிடித்த கேண்டிட் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
ஒரு பக்கம் படப்பிடிப்பு பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் இப்படத்தை கைப்பற்ற பல நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியாகும் முன்னரே சுமார் 250 கோடிக்கு பிசினஸ் செய்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் தீயாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 'விடாமுயற்சி' படத்தின் சாட்டிலைட் உரிமையை, சன் டிவி கைப்பற்றி உள்ளதாகவும்.. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் கைப்பற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டும் சேர்த்து சுமார் 250 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இப்படத்தின் மொத்த பட்ஜெட் 300 முதல் 350 கோடியாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில்... இப்படத்தின் பிஸ்னஸ் மட்டுமே 250 கோடி என கூறப்படுவது... ரிலீசுக்கு முன்பே போட்ட பணத்தில் 75 சதவீதத்தை தயாரிப்பு நிறுவனம் எடுத்து விட்டதாக பார்க்கப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D