
பிரபல நடிகர் தனுஷ், கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மூத்த தமிழ் திரையுலக நடிகர் நாசர், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தை கொண்ட திரைப்படமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கை ராணுவத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் துரிதமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் சென்ற 2023ம் ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2024 பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த சூழலில் இன்று ஜனவரி 6ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. துவக்கம் முதல் முடிவு வரை வெறித்தனமான ஆக்சன் காட்சிகளுடன், கத்தி போன்ற கூர்மையான வசனங்களுடனும் ட்ரெய்லர் அமைக்கப்பட்டுள்ளது தனுஷின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
குறிப்பாக கேப்டன் மில்லராக வரும் நடிகர் தனுஷ் பேசும் வசனங்கள், அனல் பறக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கால ஆட்சியில் இந்தியர்கள் பட்ட அவதிகளை எடுத்துக்கூறும் வண்ணம் இந்த திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.