குல தெய்வம் கோவிலில் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் வழிபாடு நடத்தியுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு பொங்கலன்று தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இதையடுத்து தனுஷின் 40வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். ஜகமே தந்திரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.
இதையும் படிங்க: "பிகில்" பாண்டியம்மாளா இது?.... ஸ்டன்னிங் மார்டன் லுக்கில் அசத்தும் புகைப்படங்கள்...!
தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் வரும் மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: சும்மா கெத்தா.. செம்ம ஸ்டைலா... ஐதராபாத் விமான நிலையத்தை கலக்கிய நயன்தாரா..!
இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள மல்லிங்காபுரத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அந்த ஊருக்கு அருகேயுள்ள முத்துரங்காபுரத்தில் இருக்கும் தனுஷின் குல தெய்வமான கஸ்தூரி மங்கம்மாள் ஆலயத்தில் மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் அப்பா, அம்மா ஆகியோருடன் தனுஷ் வழிபாடு நடத்தியுள்ளார்.
தேனி மண்ணின் மைந்தன் அண்ணன் தனுஷ் அவர்களை வரவேற்கிறோம்🤩 pic.twitter.com/rb3jmaiFlp
— Muthupandi Dhanush (@pandi_dhanush)குல தெய்வம் கோவிலில் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் வழிபாடு நடத்தியுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.