
தனக்கு நித்யானந்தா பேச்சு பிடிக்கும். அவர் கூப்பிட்டால் நிச்சயம் போய்விடுவேன். நான் ஒரு கன்னிப்பெண் என பிக்பாஸ் பிரபலம் மீராமிதுன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘’நித்தியானந்தாவிடம் இருந்து அழைப்பு வந்தால் கண்டிப்பாக போய் அவருடன் உட்கார்ந்து நிறைய பேசுவேன். அவர் சொல்வது எல்லாமே சரிதான். அவர் சொல்வது எல்லாம் உண்மை. ஏன் அவரை ட்ரோல் செய்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஒரு பத்து பேருக்கு ஒரே விஷயத்தை சொல்கிறார்கள் என்றால் இன்னொருத்தர் பதினோராவது ஆளாக வித்தியாசமாக சொல்வார்.
அதற்கு தப்பு என்று அர்த்தமே கிடையாது. அவர் அளவுக்கு இன்னும் யாரும் யோசிக்கவில்லை என்பதுதான் அர்த்தம். நான் நித்யானந்தாவின் பேச்சுகளை கேட்டுக் கொண்டு இருக்கிறேன். அவர் உண்மையாக, சரியாக, நேர்மையாக பேசுகிறார். ஆகையால் நான் அவருடன் உட்கார்ந்து நிறைய பேசுவேன். நித்தியானந்தா வெர்ஜின் பெண்களை ஏன் தேர்ந்தெடுக்கிறார் என்றால் அவருடைய ஆன்மிகத்தை பரப்புவதற்காக. எப்போதும் வெர்ஜின் பெண்கள் வலிமையாக இருப்பார்கள். அவர்களிடம் தான் பவர் இருக்கிறது. சக்தி இருக்கிறது.
வெர்ஜின் என்றால் சுத்தமான பெண். நம்முடைய சக்கரா, நம்முடைய எனர்ஜி எல்லாமே நம்மிடம்தான் இருக்கிறது. கண்ணகி முதல் பலபேர் அதற்கு உதாரணம். கன்னிப்பெண்களுக்கு எப்போதுமே பெரிய சக்தி இருக்கிறது. நான் கன்னிப் பெண் வேண்டும் என்றால் சோதனை செய்து காட்டவா?’’எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.