அக்கா மகளுக்கு மொட்டை... குடும்பத்துடன் சாமி தரிசனம்... நடிகர் தனுஷின் திருப்பதி விசிட் போட்டோஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 11, 2020, 01:54 PM IST
அக்கா மகளுக்கு மொட்டை... குடும்பத்துடன் சாமி தரிசனம்... நடிகர் தனுஷின் திருப்பதி விசிட் போட்டோஸ்...!

சுருக்கம்

அங்கு சகோதரி மகள் ஒருவருக்கு தாய் மாமன் என்ற முறையில் தனுஷுன் மடியில் உட்கார வைத்து மொட்டை அடித்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்தாலும் குடும்பத்தினருக்காக அதிகம் நேரம் ஒதுக்குபவர் நடிகர் தனுஷ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் ஆகிய படங்களை நடித்து முடித்த தனுஷ், அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

அடுத்தடுத்து பிசியாக படங்களில் நடித்து வந்தாலும் ஷூட்டிங் இல்லாத நாட்களை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். தனுஷுக்கு அண்ணன் செல்வராகவனை தவிர இரண்டு சகோதரிகள் உள்ளனர். தற்போது ஷூட்டிங் ஏதும் இல்லாத இந்த சமயத்தை பயன்படுத்தி கொண்ட தனுஷ், குடும்பத்துடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார். 

அங்கு சகோதரி மகள் ஒருவருக்கு தாய் மாமன் என்ற முறையில் தனுஷுன் மடியில் உட்கார வைத்து மொட்டை அடித்துள்ளனர். அப்போது குழந்தைக்கு தாய் மாமன் தனுஷ் முதல் முடி எடுத்துள்ளார், அவரது அருகில் இயக்குநர் செல்வராகவன் அமர்ந்திருக்கிறார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் புகைப்படங்கள் இதோ... 

 

 

 

 

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!
பாசத்தை உலுக்கிய துயரங்கள்; பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த சோக சம்பவங்கள்!