நடிகை கிருத்தி சனோன் மற்றும் தனுஷ் இருவரும் 'தேரே இஷ்க் மே' படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் உலா வருகிறது.
ராயன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் இட்லி கடை (Idly Kadai), குபேரா (Kubera) மற்றும் 'தேரே இஷ்க் மே' (Tere Ishk Mein) ஆகிய 3 முக்கியமான படங்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இட்லி கடை மற்றும் குபேரா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தனுஷின் முழு கவனமும் இப்போது தேரே இஷ்க் மே என்ற படத்தில் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாக் வரும் பாலிவுட் படம் தேரே இஷ்க் மெயின். இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக இந்தப் படத்தை வெளியிட படக்குழு தீவிரமாக இருக்கிறது.
இந்த நிலையில் தான் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் ஹோலி பண்டிகை கொண்டாடிய நிலையில் தனுஷுடன் இணைந்து கிருத்தி சனோன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். தேரே இஷ்க் மே படப்பிடிப்பின் போது இருவரும் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கிருத்தி சனோன், "லைட்ஸ். கேமரா. ஹோலி! ரங் சாஹே கம் ஹோ, இஷ்க் போஹோத் ஹை! தேரே இஷ்க் மே என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில், IIFA 2025 ல், கிருத்தி இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் கூறுகையில், "இது ஒரு அழகான படம். நான் இதற்கு முன்பு எந்த படத்திலும் நடித்திராத கதாபாத்திரம் ஒன்று. காதல் கதைகள் எனக்கு பிடித்தமான ஒன்று. ஆனந்த் சார் அவற்றை மிகவும் நன்றாக மற்றும் தனித்துவமாக செய்கிறார். தனுஷுடன் முதல் முறையாக வேலை செய்வது மிகவும் உற்சாகமாக இருக்கிறது."
கடந்த ஆண்டு, ராஞ்சனாவின் 10வது ஆண்டு விழாவில் படத்தை அறிவித்தபோது, ராய் ஒரு அறிக்கையில், "தனுஷுடன் எங்கள் அடுத்த முயற்சியான 'தேரே இஷ்க் மே'வை வெளியிட இதைவிட சிறந்த நாள் இருக்க முடியாது. 'ராஞ்சனா' என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் ரசிகர்கள் உலகளவில் தொடர்ந்து பெறும் அன்பு மற்றும் அபிமானம் உண்மையிலேயே மனதைக் கவரும். ராய் படத்திற்கான ஒரு சுவாரஸ்யமான விளம்பரத்தையும் வெளியிட்டார்.
அந்த வீடியோவில் தனுஷ் கையில் ஒரு வெடிகுண்டுடன் இருண்ட சந்துகளில் ஓடுகிறார். அவரது உரையாடலின் முடிவில், அவர் "பிச்ச்லி பார் தோ குந்தன் தா, மான் கயா. பர் இஸ் பார் சங்கர் கோ கைசே ரோகோகே? (கடந்த முறை குந்தன், அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த முறை நீங்கள் சங்கரை எப்படி நிறுத்துவீர்கள்" என தனுஷ் படத்தைப் பற்றி உற்சாகமாக பகிர்ந்துள்ளார். "ஹர் ஹர் மஹாதேவ்... எனது அடுத்த ஹிந்தி படம்," என்று அவர் ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.