ஆக்‌ஷனுக்கு ரெஸ்ட் விட்டு; கெளதம் மேனன் இயக்கத்தில் காதல் நாயகனாக மாறும் கார்த்தி!

Published : Mar 13, 2025, 03:00 PM IST
ஆக்‌ஷனுக்கு ரெஸ்ட் விட்டு; கெளதம் மேனன் இயக்கத்தில் காதல் நாயகனாக மாறும் கார்த்தி!

சுருக்கம்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் கார்த்தி, அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Karthi Team up With Gautham Menon : நடிகர் சூர்யாவின் சகோதரரான கார்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் செம பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது வா வாத்தியாரே என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

சர்தார் 2 ரெடி

இதையடுத்து சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இப்படத்தில் கார்த்தியுடன் மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சர்தார் 2 திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... கார்த்தி மகன் கந்தனா இது? மளமளவென வளர்ந்துட்டாரே; திருப்பதி கோவிலில் எடுத்த போட்டோஸ் இதோ

கார்த்தி கைவசம் உள்ள படங்கள்

இதுதவிர டாணாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் கார்த்தி. அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கைதி 2 படமும் கார்த்தியின் கைவசம் உள்ளது. மேலும் மாரி செல்வராஜிடமும் கதை கேட்டு அவருக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் கார்த்தி. இப்படி கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருக்கும் அவர் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.

கெளதம் மேனன் உடன் கூட்டணி

அதன்படி அண்மையில் இயக்குனர் கெளதம் மேனன், நடிகர் கார்த்தியை சந்தித்து ரொமாண்டிக் கதை ஒன்றை கூறி இருக்கிறார். அது கார்த்திக்கு பிடித்துப் போக அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். அதற்கான ஸ்கிரிப்டை தயார் செய்ய சொல்லி உள்ளாராம் கார்த்தி. வெந்து தணிந்தது காடு படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜெயமோகன் தான் இப்படத்திற்கும் திரைக்கதை மற்றும் வசனம் எழுத உள்ளாராம். இப்படம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாம்.

இதையும் படியுங்கள்... Karthi : விபத்தில் சிக்கிய நடிகர் கார்த்தி - என்ன ஆச்சு? படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழு!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?
மதகஜராஜா முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை... 2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் மூவீஸ்