நடிகர் சின்னி ஜெயந்த் மகன் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமனம்..! குவியும் வாழ்த்து..!

By manimegalai a  |  First Published Oct 9, 2022, 6:13 PM IST

தமிழ் சினிமாவில் காமெடியன் என்பதை தாண்டி பன்முக திறமையாளராக அறியப்படும் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் மாவட்டத்தின்  சார் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 


தமிழ் சினிமாவில், காமெடி வேடத்தில் நடிப்பவர்களின் அனைவரது நடிப்பும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விடுவது இல்லை. ஆனால் காமெடியில் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளனர் நடிகர் சின்னி ஜெயந்த். அதே போல் சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி இயக்குனர், மற்றும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட இவருடைய மகன் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சின்னி ஜெயந்த் திரைத்துறை சம்பந்தமான டிப்ளமா படிப்பை, முடித்து விட்டு நடிக்க வாய்ப்பு தேடிய இவர், பிரபல இயக்குனர் மஹேந்திரன் இயங்கிய 'கை கொடுக்கும் கை'  படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை துவங்கினார். இதை தொடர்ந்து, பொங்கலோ பொங்கல், கிழக்கு வாசல், காதலர் தினம், போன்ற 200க்கும்  மேற்பட்ட படங்களில் நடித்தார். 'உனக்காக மட்டும்' என்கிற படத்தை இயக்கிய சின்னி ஜெயந்த், படங்களை தயாரித்தும் உள்ளார்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: இந்து என்பது ராஜராஜ சோழனுக்கு பொருந்தும்..! ஏன்... எப்படி? அதிரடியாக பேசிய இயக்குனர் மோகன் ஜி..!
 

இந்நிலையில் இவருடைய மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த (UPSC) தேர்வு, அதாவது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில், 75ஆவது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றார். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி வழிப்பட்டு பின்னர் வெளிமாநிலங்களில் களப்பணி பயிற்சி பெற்று வந்தனர். 

தற்போது இவர்களின் பயிற்சி காலம் நிறைவடைந்த நிலையில், மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த ஸ்ருதன்ஜெய் நாராயணன் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராகவும் பணியாற்றி வந்தார். தற்போது இவர் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து நடிகர் சின்னி ஜெயந்த் மகனுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
 

click me!