உடல் பயிற்சி செய்த போது நடந்த விபரீதம்.. நூல் இழையில் உயிர் தப்பிய நடிகர் பப்லு! திக் திக் அதிர்ச்சி வீடியோ!

Published : Dec 16, 2021, 02:54 PM ISTUpdated : Dec 16, 2021, 02:58 PM IST
உடல் பயிற்சி செய்த போது நடந்த விபரீதம்.. நூல் இழையில் உயிர் தப்பிய நடிகர் பப்லு! திக் திக் அதிர்ச்சி வீடியோ!

சுருக்கம்

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக அறியப்பட்ட பப்லு உடல்பயிற்சி செய்த போது நடந்த விபரீதத்தின் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக அறியப்பட்ட பப்லு உடல்பயிற்சி செய்த போது நடந்த விபரீதத்தின் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் 1971 ஆம் ஆண்டு 'நான்கு சுவர்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் பப்லு. இந்த படத்தை தொடர்ந்து 'நீதி', 'டாக்டர் சிவா', 'நாளை நமதே', 'பாரதவிலாஸ்', போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 'நான் சிவப்பு மனிதன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர், அஜித் நடித்த 'அவள் வருவாளா', 'சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' நாகார்ஜுனாவுடன் 'பயணம்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: Vikram Affected corona: திரையுலகில் அடுத்த அதிர்ச்சி.. கமல் - அர்ஜுனை தொடர்ந்து நடிகர் விக்ரமுக்கு கொரோனா!

 

தமிழ் மொழியை தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி 'கோகுலத்தில் சீதை', 'அரசி', 'வாணி ராணி', 'மர்ம தேசம்' போன்ற பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணான கண்ணே' சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: Kushboo: 20 வயசு ஹீரோயின் போல் மாறி... நயன்தாரா - தீபிகா படுகோனை ஓவர் டேக் செய்த குஷ்பு! வேற லெவல் போட்டோஸ்!

 

மேலும், பெசன்ட் நகரில் சா ரிப்ளிக் என்கிற டீ ஷாப் ஒன்றையும் நடத்தி வருகிறார். உடல் பயிற்சி மற்றும் ஃபிட்னசில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்பவரைகளையே அதிர வைத்துள்ளது. இதில் அவர் வெயிட் தூக்க தயாராகி இருக்கும் போது, எதிர்பாராத வித்தாக அந்த கம்பி அவரது கழுத்தில் விழுந்துள்ளது. இதை பார்த்து பதறி போன ரசிகர்கள் பலர் அக்கறையோடு இவரிடம் கேள்விகள் எழுப்ப, தனக்கு ஒன்றும் இல்லை நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: Pushpa Movie Review: புஷ்பா படம் எப்படி இருக்கு? அரேபிய சினிமா விமர்சகரின் முதல் விமர்சனம்! வைரலாகும் பதிவு!

அதே நேரம், அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!