பிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published May 31, 2020, 4:58 PM IST

தற்போது பிகினி உடையில் ஹாயாக காலை நீட்டி மிதப்பது போன்ற ஹாட் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். 


பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுமீத் சைகலின் மகள் சாயிஷா, தெலுங்கு சினிமாவில் “அகில்“ என்ற படம் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக “வனமகன்” படம் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் கார்த்தி உடன் “கடைக்குட்டி சிங்கம்”, விஜய் சேதுபதி உடன் “ஜுங்கா” போன்ற படங்களில் நடித்தார். அந்த வரிசையில் ஆர்யாவுக்கு ஜோடியாக “கஜினிகாந்த்” படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  “இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

திருமணத்திற்கு பிறகு குடும்பம், கணவர், குழந்தைகள் என்று செட்டில் ஆவார் என நினைத்தால், முன்பை விட இப்போது தான் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கிறார். காரணம் திருமணத்திற்கு பிறகும் அம்மணி தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவது தான். தற்போது புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் “யுவரத்னா” என்ற படத்தில் நடித்து வரும் சாயிஷா, கணவர் ஆர்யாவுடன் “டெடி” படத்திலும் நடித்துள்ளார். 

இதையும் படிங்க: 

தற்போது லாக்டவுனால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பிரபலங்கள் பலரும் வீட்டு வேலை செய்வது, உடற் பயிற்சி செய்வது, நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக மார்டன் உடையில் சாயிஷா ஆடிய கவர்ச்சி நடன வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. அவ்வப்போது கணவருடன் இருப்பது, சமையல் செய்வது போன்ற போட்டோக்களை பகிர்ந்து வந்த சாயிஷா, அதிரடி கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு ரசிகர்களை நிலை குலைய வைத்துள்ளார். 

இதையும் படிங்க: என்னாது நிர்வாண யோகாவா?.... ஊரடங்கில் எல்லை மீறி ஆட்டம் போடும் இளம் நடிகை...!

தற்போது பிகினி உடையில் ஹாயாக காலை நீட்டி மிதப்பது போன்ற ஹாட் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். அத்துடன் தான் தண்ணீரை மிஸ் செய்வதாகவும் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சாயிஷாவின் அழகை இஷ்டத்துக்கு வர்ணித்து வருகின்றனர். 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I miss the water! 😍😱 #waterbaby#throwback#holiday#bali#memories

A post shared by Sayyeshaa (@sayyeshaa) on May 29, 2020 at 8:24am PDT

click me!