ரீல் இல்ல; ‘ரியல்’ ஹீரோ என்பதை நிரூபித்த சல்மான் கான்... காவலர்களின் உயிர் காக்க செய்த மகத்தான உதவி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 31, 2020, 4:32 PM IST
Highlights

கொரோனா நேரத்திலும் தங்களது உயிரை பணயம் வைத்து போராடி வரும் மும்பை காவல்துறையினருக்காக ஒரு லட்சம் சானிடைசர்களை நன்கொடையாக கொடுத்துள்ளார். 

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 8 ஆயிரத்து 380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மக்களை பீதியடையச் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 82 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்ததால், கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது. இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பிரச்சனையை தீர்ப்பதற்காக பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: “இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மும்பையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள், வேலை இழந்து கஷ்டப்படும் தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் களத்தில் இறங்கி உதவி புரிந்து வருகின்றனர். இதற்கு முன்பு இந்தி நடிகர் சால்மான் கான், பாலிவுட்டில் உள்ள 5 லட்சம் உறுப்பினர்களில் 25 ஆயிரம் பேருக்கு உதவி புரிந்தார். முதற்கட்டமாக 23 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் தலா 3 ஆயிரம் வீதம் செலுத்தினார். 

இதையும் படிங்க: 

மும்பை பன்வல் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த சல்மான் அங்கிருந்த 25 ஆயிரம் ஏழை மக்களின் குடும்பத்திற்கும் மாளிகை பொருட்களை வழங்கி உதவினார். கொரோனா நேரத்திலும் தங்களது உயிரை பணயம் வைத்து போராடி வரும் மும்பை காவல்துறையினருக்காக ஒரு லட்சம் சானிடைசர்களை நன்கொடையாக கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: 

தனது சொந்த நிறுவனமான ஃப்ரெஷ் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட சனிடைசர்களை காவல்துறையினருக்கு கொடுத்து உதவியுள்ளார். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர் சல்மான் கானின் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

click me!