
தமிழ் சினிமாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் விஜயகுமார் அவர்களுடைய மகன் தான் நடிகர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தனது முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் புகழ் பெறவில்லை என்றாலும், கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் முன்னணி நாயகர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் அருண் விஜய்.
இதற்கு அவருடைய முழு உழைப்பு மட்டுமே காரணம் என்றால் அது மிகையல்ல, தொடர்ச்சியாக நல்ல பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தன்னை மக்கள் ரசிக்கும் வண்ணம் மாற்றிக் கொண்ட அருண் விஜய்க்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அண்மையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள "வனங்கான்" படத்தின் டீசர் வெளியாகி, அவருடைய கடின உழைப்பை மக்கள் பாராட்டும் வண்ணம் வைரலானது.
மதுபோதையில் விமான நிலையத்தில் அலப்பறை செய்த வேல்முருகனை சுத்துபோட்ட அதிகாரிகள்
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருடைய சகோதரி அனிதா விஜயகுமார் அவர்களுடைய மகளின் திருமணம் நடைபெற்றது. அது சம்பந்தமான கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் அருண் விஜய் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இப்பொது அருண் விஜய் தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி முத்து கண்ணு குறித்து ஒரு தனியார் youtube சேனலில் அவதூறாக பேசியது குறித்து தனது கண்டனத்தை அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
அந்த youtube சேனல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் பேசிய அந்த விஷயங்கள் தனது குடும்பத்தாருக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் மூலம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அவர் ஒரு புகார் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.