இப்படி கூட கொரோனா பரவும் வாய்ப்பு உண்டு! நடிகர் அர்ஜுன் பகீர் பேச்சு!

Published : Mar 25, 2020, 11:03 AM IST
இப்படி கூட கொரோனா பரவும் வாய்ப்பு உண்டு! நடிகர் அர்ஜுன் பகீர் பேச்சு!

சுருக்கம்

கொரோனாவின் கோர தாண்டவத்தில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், இதனை பற்றி சிலர் கண்டு கொள்ளாமல்... வெளியில் சுற்றி வருகின்றனர். அவர்களுக்கு கொரோனாவின் உண்மை முகம் தெரியாது என்று தான் கூற வேண்டும்.  

கொரோனாவின் கோர தாண்டவத்தில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், இதனை பற்றி சிலர் கண்டு கொள்ளாமல்... வெளியில் சுற்றி வருகின்றனர். அவர்களுக்கு கொரோனாவின் உண்மை முகம் தெரியாது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் பிரபல நடிகர் அர்ஜுன், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீடியோ ஒன்றை வழியிட்டுள்ளார்.

இதில்  " இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும்  அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இது புதிதான ஒரு வீடியோ கிடையாது. கொரோனா வைரஸ் பற்றிய வீடியோ தான்.

உங்கள் எல்லோருக்கும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால்... தயவுசெய்து மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீட்டின் உள்ளேயே இருங்கள்.   வெளியே வந்து விடாதீர்கள். இது உங்களை மற்றும் உங்கள் பெற்றோர் குடும்பத்தினரை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நேரம்.

 இதற்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். நீங்கள் வீட்டில் உள்ளே இருந்தால் மட்டுமே அரசால் உதவி செய்ய முடியும். நமக்கு தெரிந்த வரை கொரோனா வைரஸ், தொட்டால், பாதிக்க பட்டவர் எச்சில் மேலே பட்டால் வரும் என்பது.

ஆனால் புதிதாக சில விஷயங்கள் தெரிய வந்துள்ளது. இந்த ஒரு வைரஸ் காற்றினால் கூட பரவும் என்றும், இது மிகவும் மோசமான விஷயம் என தெரிவித்துள்ளார். இதனால் நாம் வெளியில் போவதை தவிர்க்க வேண்டும் சில அத்தியாவசிய விஷயங்களுக்காக வெளியில் செல்லும்போது கூட முகமூடி அணிந்து செல்வது நல்லது என இந்த வீடியோவில் நடிகர் அர்ஜின் பேசியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Divorce : இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்தது ஏன்? பல வருடங்களுக்குப் பின்னர், பகிரங்கமாக போட்டு உடைத்த பிரபல நடிகர்.!
மீண்டும் மீண்டுமா... மறுபடியும் வெயிட்டிங் லிஸ்டில் போடப்பட்ட டாக்ஸிக் - காரணம் என்ன?