‘ஜெயலலிதாவின் ஆன்மா யாருக்கு ஓட்டுப்போடணும்னு சொல்லுது தெரியுமா?’...நடிகர் ஆனந்தராஜ் பகீர்...

By Muthurama LingamFirst Published Apr 16, 2019, 9:26 AM IST
Highlights


தன்னைத் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவே முழுக்க முழுக்க வழி நடத்துவதாகவும், அந்த ஆன்மாவின் விருப்பப்படியே அனைவரையும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுப்பதாகவும் நடிகர் ஆனந்தராஜ் திகில் கிளப்புகிறார்.

தன்னைத் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மாவே முழுக்க முழுக்க வழி நடத்துவதாகவும், அந்த ஆன்மாவின் விருப்பப்படியே அனைவரையும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுப்பதாகவும் நடிகர் ஆனந்தராஜ் திகில் கிளப்புகிறார்.

தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு முடிவடையும் நிலையில் திடீரென்று நோட்டாவுக்கு வாக்குப் போடச்சொல்லுவது ஏன் என்பது குறித்துப்பேசிய ஆனந்தராஜ்,” இந்த மாதிரி முடிவை வாக்குப்பதிவு நேரம் நெருங்கும் கடைசி நிமிடத்தில்தான் வெளியிட வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தை என்ற பெயரில் மனமாற்றம், மன உளைச்சல் உள்ளிட்ட விஷயங்களில் சிக்க முடியாது.

 14 ஆண்டுகளாக அ.த்.மு.கவுக்காக உழைத்தவன். ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவன். எனக்கு ஏன் சீட்கொடுக்கக் கூடாது. நான் போட்டியிட தகுதியில்லாதவனா? ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும்  என் கண்களை பார்த்து பேசும் வலிமை இல்லாதவர்களாக ஆனதுதான் இந்த முடிவுக்குக் காரணம்.  ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு குடும்ப அரசியலில் சிக்காமல் கட்சியை காப்பாற்ற வேண்டும் என முதலில் கூறியவன் நான். என்னை  இருவரும்சேர்ந்து கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்து பக்கத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டாமா. தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்யும் இயந்திரமல்ல நடிகன்.

கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு எந்த ஒரு சுகத்தையும் அனுபவிக்காத கோடானுகோடி தொண்டர்கள் அதிமுகவில் என்னை அண்ணனாக பார்க்கிறார்கள். அதோடு அம்மாவின் ஆன்மா எனக்குள் இருப்பதாகவே கருதுகிறேன். அதனால் அதிமுகவில் இருந்து வேறு எங்கும் செல்லும் மனநிலை எனக்கு இல்லை.

என் கூடவே அம்மாவின் ஆன்மா இருப்பதாகவே கருதுகிறேன். தைலாபுரம் தோட்டத்த்தில் கூட்டணிபற்றி பேசிவிட்டு திரும்பியபோது ஒரு எம்.பி. அகால மரணம் அடைகிறார். இன்னொருவர்  நூலிழையில் உயிர் தப்பிக்கிறார். இதெல்லாம் இந்தக் கூட்டணி வேண்டாம் என்று அம்மாவின் ஆன்மா நினைப்பதாக நடக்கும் செயல்கள்தான். அப்படித்தான் என்னையும் நோட்டாவுக்கு வாக்களிக்க அவர் பரப்பச் சொல்வதாகவே கருதுகிறேன்” என்கிறார் ஆனந்தராஜ்.

click me!