
தமிழ் படங்களில் திருநங்கை, கதாபாத்திரங்களில் நடித்து பல நடிகர்கள் பாராட்டை பெற்று உள்ளனர். அந்த வகையில் 'காஞ்சனா' படத்தில் சரத்குமார் திருநங்கையாக நடித்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.
சமீபத்தில் திரைக்கு வந்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார். அவரது தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதேபோல் விஜயஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், சரோஜா ,கனகராஜ், ஆனந்த பாண்டியன், ஆகியோர் நடித்து திரைக்கு வந்த 'தாதா 87 ' படத்தில் ஸ்ரீ பல்லவி என்கிற நடிகை திருநங்கையாக நடித்திருந்தார்.
பொதுவாக திருநங்கை வேடங்களில் நடிகர்கள் நடித்து வரும் நிலையில், இமேஜ் பார்க்காமல் ஸ்ரீ பல்லவி, இந்த கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து படக்குழுவினரை வியக்கவைத்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன. திருநங்கைகளை பெண் என்று அழைப்போம் என்ற கருத்தை பதிவு செய்யும் படமாக இதை உருவாக்கி இருந்தார் இயக்குனர்.
இந்த நிலையில் திருநங்கையாக நடித்து பாராட்டை பெற்ற ஸ்ரீ பல்லவி 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் திரையுலக பிரபலங்களும் 'தாதா 87 ' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.