நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இன்னும் ’தல’ வரவில்லை... இன்றைய தேர்தலிலும் வாக்களிக்க மாட்டாரா அஜீத்?...

By Muthurama LingamFirst Published Jun 23, 2019, 11:46 AM IST
Highlights

எந்த நேரமும் இருதரப்புக்கு மத்தியில் மோதல் ஏற்படலாம் என்று எண்ணத்தில் நடிகர் சங்கத் தேர்தல் நடக்கும் மைலாப்பூர் புனித அப்பாஸ் பள்லியில் 400க்கும் மேற்பட்ட போலீஸார் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை இல்லாத ஒருவரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் சற்றுமுன்னர் வாக்களிக்க வந்த நடிகர் மைக் மோகனின் வாக்கை யாரோ கள்ள ஓட்டாக முன்கூட்டியே குத்திவிட்டுப்போயிருக்க ஓட்டுச் சாவடியில் மெல்ல சலசலப்பு துவங்கியிருக்கிறது.அடுத்தபடியாக செயற்குழு உறுப்பினர்கள் 9 பேருக்கு பதில், வேறு 9 பேரை அழைத்து வந்ததாக சுவாமி சங்கரதாஸ் அணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தட்டிக் கேட்ட பாண்டவர் அணியால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

11.30 மணி நிலவரப்படி, மொத்தம் 3,644 பேர் உறுப்பினர்களாக உள்ள சங்கத்தில்  3,171 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்னும் நிலையில் இதுவரை 40 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. நடிகர் விஜய் சரியாக 11.30க்கு வாக்களிக்க வந்துள்ள நிலையில் அஜீத் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த 2015ல் இதே பள்ளியில் நடந்த தேர்தலில் அஜீத் வாக்களிக்க வராதது மட்டுமின்றி தான் வாக்களிக்காமல் போனதற்காக ஒரு சிறு விளக்கம் கூட தரவில்லை.

click me!