
இன்றைய தினம் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில், திடீர் என நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்வதாக கூறி அறிக்கை விடுத்தார் அனைத்து சங்க தென் மாவட்ட பதிவாளர்.
இதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பதிவாளர் போட்ட தடையை நீக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் சங்க தேர்தல், நடைபெறுவதாக சொன்ன தேதியில், தற்போது மைலாப்பூரில் உள்ள பள்ளியில், 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மத்தியில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களுடைய வாக்கு போடும் கடமையை நிறைவேற்றி வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, இதே நாளில், பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.வி.சேகரின் நாடகம், ஏற்கனவே நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்த "எம்.ஜி.ஆர் ஜானகி அரசு பெண்கள் கல்லூரியில்" நடப்பதாக இருந்தது.
ஆனால், நடிகர் சங்க தேர்தல், இடம் மாறியதை தொடர்ந்து தற்போது எஸ்.வி.சேகரும், தன்னுடைய நாடகம் நடைபெறும் இடத்தை மாற்றியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.