விரைவில் நடிகர் ஆதிக்கு  டும் டும் டும்...

 
Published : Jun 22, 2017, 04:13 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
விரைவில் நடிகர் ஆதிக்கு  டும் டும் டும்...

சுருக்கம்

actor aathi marriage will soon

தமிழில் 'மிருகம்' படத்தின்  மூலம் கதாநாயகனாக அறிமுகம் கொடுத்தவர் நடிகர் ஆதி. நடிகர் கார்த்திக்கு எப்படி 'பருத்திவீரன்' படம் அமைந்ததோ அதே போல ஆதிக்கம் இந்த படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த' ஈரம்' 

திரைப்படம் இவரின் மாறுபட்ட தோற்றத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

அதற்கு பின் இவர் நடித்த 'அய்யனார்', 'ஆடுபுலி', 'அரவான்' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. 

மேலும் இவருக்காகவே இவருடைய தந்தை தயாரித்து, சகோதரர் இயக்கிய' யாகாவராயினும் நாகாக்க' திரைப்படமும் தோல்வியடைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார் ஆதி.

தமிழ் மற்றும் தெலுங்கில் திரில்லர் மற்றும் காமெடி கலந்த மரகத நாணயம் என்னும் படத்தில் நடித்து வந்தார். இந்த படம்  கடந்தவாரம் வெளிவந்து தமிழில் மற்றும் இன்றி தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பல நாட்களுக்கு பின் தமிழில் ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்த சந்தோஷத்தில் உள்ள ஆதிக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் இவருடைய பெற்றோர் இவருக்கு திருமணத்திற்காக பெண் பார்த்து வருகின்றார்களாம். 

கண்டிப்பாக பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்யவுள்ளதாக கூறும் ஆதி, எப்படியும் இந்த வருட இறுதியில் அல்லது  அடுத்த வருடம் துவக்கத்தில் நிச்சயம் திருமண மாப்பிள்ளையாக தன்னை பார்க்கலாம் என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு