விவேகம் சாதனையை  சில மணி நேரத்தில் முறியடித்த மெர்சல்...

Asianet News Tamil  
Published : Jun 22, 2017, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
விவேகம் சாதனையை  சில மணி நேரத்தில் முறியடித்த மெர்சல்...

சுருக்கம்

mersal first look high get high rt

கோலிவுட் திரையுலகில் மிக அதிக ரசிகர்கூட்டத்தை உடையவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்களை பற்றி சிறு தீப்பொறி கசிந்தாலும் அதனை பெரிதாக்கி வைரலாகவே மாற்றி விடுவார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில், இளையதளபதி விஜயின் பிறந்த நாளை மிகவும் குஷியாக கொண்டாடி வரும் ரசிகர்களை, மேலும் சந்தோஷப்படுத்தும் வகையில் இன்று விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் ஃபஸ்ட் லுக் மற்றும் பெயரையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஃபஸ்ட் லுக் ஏற்கனவே வெளிவந்த அஜித்தின் ஃபஸ்ட் லுக் சாதனையை முறியடித்துள்ளது. எந்தவகையில் தெரியுமா...?

அஜித் நடித்து வெளிவந்த விவேகம் படத்தின் ஃபஸ்ட் லுக், இந்தியாவிலேயே  அதிகம் ஆர் டி ஆன ஃபஸ்ட்  லூக்காக இருந்து வருகிறது. இதுவரை விவேகம் பஸ்ட் லுக்கை 30 ஆயிரம் பேர் ஆர் டி செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வெளியான மெர்சல் ஃபஸ்ட் லுக் வெறும்  ஒரு மணி நேரத்தில் 22 ஆயிரம் ஆர் டி செய்யப்பட்டிருந்தது, நான்கு மணிநேரத்தில் 30 ஆயிரம் ஆர்டியை கடந்து விவேகம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது மெர்சல்.

இந்த சாதனையை கண்டு பலர் உண்மையிலேயே மெர்சலாகியுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Arasan: மதுரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'அரசன்'.! வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான் என்ன?!
Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!