பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் டாய்லெட்டுக்கு வரிவிலக்கு…

 
Published : Jun 22, 2017, 09:47 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் டாய்லெட்டுக்கு வரிவிலக்கு…

சுருக்கம்

Tax exemption to state governments in BJP-ruled states

பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் ‘டாய்லெட்’ படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘டாய்லெட் ஏக் பிரேம் கதா’.

இந்தப் படத்தில் அக்ஷ்ய் குமார், பூமி பத்னேகர், அனுபம் கெர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சினிமா படங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் வரிச்சலுகை என்ற ஒன்று அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சமூக பிரச்னைகளை சொல்லும் படத்திற்கு வரிச்சலுகை வழங்கப்படும். அந்த வகையில் திறந்தவெளி டாய்லெட்டை ஒழிக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ள இந்த ‘டாய்லெட் ஏக் பிரேம் கதா’ படத்திற்கு வரிச்சலுகை நிச்சயம் கிடைக்கும்.

அதுவும் இது பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை வெளிப்படுத்தும் படம் என்பதால் மற்ற மாநிலங்களில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நிச்சயம் இப்படத்திற்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!