இரண்டாவது போஸ்டரை ரிலீஸ் செய்து மேலும் இன்ப அதிர்ச்சி கொடுத்த மெர்சல் டீம்…

 
Published : Jun 22, 2017, 09:42 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
இரண்டாவது போஸ்டரை ரிலீஸ் செய்து மேலும் இன்ப அதிர்ச்சி கொடுத்த மெர்சல் டீம்…

சுருக்கம்

The second poster was released by Mersel team.

விஜய் நடித்து வரும் 61-வது படத்தில் தலைப்பும், முதல் போஸ்டரும் வெளியாகி உலகம் முழுவதும் டிரெண்டாகியுள்ள நிலையில் இரண்டாவது போஸ்டரும் வெளியிட்டு மெர்சலாக்கி உள்ளனர் படக்குழுவினர்.

அட்லி இயக்கத்தில் விஜய் தன்னுடைய 61-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில், விஜய் தனது 43-வது பிறந்தநாளை நாளை (ஜூன் 22) கொண்டாட இருக்கிறார்.

இதனை முன்னிட்டு விஜய் 61வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு இன்று வெளியாகியுள்ளது.

மெர்சல் என்ற படத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே #Mersal என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டாப் 10 ட்ரெண்டிங்கில் வந்தது.

அதோடு விஜய்யின் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டியும், விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்தும் சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது தான் தாமதம் அதுக்குள்ளேயே ரசிகர்கள் பேனர், பிளக்ஸ் என்று அமர்க்களப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் மெர்சல் படத்தின் இரண்டாவது போஸ்டர் 22-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி இரண்டாவது போஸ்டர் சிவப்பு நிறத்தில் மீண்டும் மெர்சலாக வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!