டி . ராஜேந்தரின் காணாமல் போன காதலி

 
Published : Jun 22, 2017, 11:23 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
டி . ராஜேந்தரின் காணாமல் போன காதலி

சுருக்கம்

TRajendhar kanamal pona kathali movie official announcement

டி . ராஜேந்தர் கடைசியாக இயக்கிய படம் வீராச்சாமி. அதன் பின் ஒரு தலைக்காதல் என்ற படத்தை இயக்கினார். இது பாதியிலேயே நின்றுவிட்டது. எனவே தற்போது  டி . ராஜேந்தர் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். படத்தின் பெயர் காணாமல் போன காதலி மலேசியாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரின் மகன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினை ஆடிஷன் வைத்து தேர்வு செய்துள்ளார். எப்போதும் போல டி . ராஜேந்தரே எல்லாம். கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் எல்லாமே. மேலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்கிறார்கள். படத்தின் பாதிக் காட்சிகள் மலேசியாவிலும், மீதி காட்சிகள் ஐரோப்பியாவிலும் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். டி.ராஜேந்தர் என்கிற பெயரைக் கேட்டதும் சட்டென உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? தாடி, ரைமிங் டயலாக்,அவரைப் பற்றிய மீம்ஸ், கிண்டலான வீடியோ, வாடா என் மச்சி, வாயிலேயே மியூசிக் போடுவது,  சினிமாவில் தவிர்க்கவே முடியாத நபர் அவர் என்பதுதான் நிஜம். சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் நடிப்பு, இசை, பாடல், கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் என சகலத்திலும், கில்லாடி. முகம் முழுக்க மண்டிக்கிடக்கும் தாடி, பொசு பொசுவென சிலுப்பிக் கொள்ளும் முடி என ஹீரோவுக்கென எந்தப் பெரிய அடையாளமும் இல்லாமல் வந்து ஹீரோவாகவும் ஜெயித்ததில் இருக்கிறது அவரின் வெற்றி. ஒரு படம், இரண்டு படம் இல்லை கடைசியாக நடித்த கவண்  மட்டுமல்ல டி . ராஜேந்தர் நடித்து கொண்டிருக்கும்  காணாமல் போன காதலிவரை அதே தோற்றம்தான். காணமல் போன  காதலி படத்தில் இதுவரை தராத ஒரு நடிப்பை ரசிகர்களுக்கு தருவேன் என சொல்கிறார் டி . ராஜேந்தர் .

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்