விமர்சனம் விஷாலின் ‘ஆக்‌ஷன்’...இப்படி இருக்கிறது மக்களின் ரியாக்‌ஷன்...

By Muthurama LingamFirst Published Nov 15, 2019, 4:30 PM IST
Highlights

சில அந்நிய சகதிகளுடன் தொடர்புடைய தீய சக்திகளால் விஷாலின் குடும்பம் வேட்டையாடப்பட, பாகிஸ்தான் பார்டர் வழியாக உலக நாடுகளுக்குப் பயணப்படும் விஷால் வழித்துணைக்கு கதகதப்பாக தமன்னாவைக் கைப்பற்றிக்கொள்கிறார். அடேங்கப்பா இவ்வளவு கவர்ச்சியான கமாண்டோவா என்று சபலத்துடன் வியக்கவைக்கிறார் தமன்னா. அடுத்து ஒரு என்ன எழவுக்கென்றே புரியாத ஏழெட்டு அடிதடி ஆக்‌ஷன்கள். சுபம்.முற்றும்.

காமெடிப்படங்கள் வழியாக பேய்ப்படங்களுக்குள் நுழைந்து தற்போது அடிதடி ஆக்‌ஷன் படத்துக்குள் நுழைந்திருக்கும் சுந்தர்.சி.க்கு இது விஷாலுடன் மூன்றாவது படம். முதல் படம் ‘ஆம்பள’ரசிகர்களின் கெட்ட நேரம் ரிலீஸானது. இரண்டாவது படம் ‘மதகஜ ராஜா’அதே ரசிகர்களின் பேரதிர்ஷ்டம் இதுவரை ரிலீஸாகவில்லை. மூன்றாவது படம் தான் இந்த ஆக்‌ஷன்’.

விஷால் உள்ளூர் கமாண்டோ, அவரது காதல் கண்மணி தமன்னா வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் அண்டர்கவர் கமாண்டோ. ]சுந்தர்.சி. கமாண்டோ போஸ்டிங்கை ஏதோ ஒரு நாயர் கடை போண்டா ரேஞ்சுக்கு நினைத்துவிட்டார் போலிருக்கிறது]. சில அந்நிய சகதிகளுடன் தொடர்புடைய தீய சக்திகளால் விஷாலின் குடும்பம் வேட்டையாடப்பட, பாகிஸ்தான் பார்டர் வழியாக உலக நாடுகளுக்குப் பயணப்படும் விஷால் வழித்துணைக்கு கதகதப்பாக தமன்னாவைக் கைப்பற்றிக்கொள்கிறார். அடேங்கப்பா இவ்வளவு கவர்ச்சியான கமாண்டோவா என்று சபலத்துடன் வியக்கவைக்கிறார் தமன்னா. அடுத்து ஒரு என்ன எழவுக்கென்றே புரியாத ஏழெட்டு அடிதடி ஆக்‌ஷன்கள். சுபம்.முற்றும்.

இப்படம் தொடர்பான பல பேட்டிகளில் உயிரைக் கொடுத்து ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தேன் என்று விஷால் பேட்டி அளித்ததாக ஞாபகம். அவருக்கு டூப் போட்டு உண்மையாய் உழைத்த ஸ்டண்ட் கலைஞர்களுக்கும், வி எஃப் எக்ஸ் காரர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட். எல்லாப் படங்களிலும் போலவே இதிலும் தீவிரவாதிகள் குறி தப்பி தப்பியே சுடுகிறார்கள். அதில் ஒரு குண்டாவது விஷால் மேல் பட்டு படம் அங்கேயே முடிந்துவிடாதா என்கிற ஏக்கம் பாதிப்படத்திலேயே வந்துவிடுகிறது.

இவர்கள் போக யோகிபாபு,ஐஸ்வர்யா லட்சுமி, சாயாசிங், ராம்கி என்று சிலர் தங்கள் பங்குக்கு டீ ஆத்திவிட்டுப் போகிறார்கள். 80,90களில் அர்ஜூன்,விஜய்காந்த் காட்டிய நாட்டுப்பற்றை லேட்டஸ்ட் கிராஃபிக்ஸ் உத்திகளுடன் கொஞ்சம் மாடர்னாகக் காட்ட முயற்சித்திருக்கும் படமே ஆக்‌ஷன். சுந்தர்.சி.தனது காமெடிப் படங்களைப் போலவே இந்த ஆக்‌ஷன் படத்தையும் ரொம்ப விளையாட்டுத்தனமாகவே டீல் பண்ணியிருப்பதால் படம் பார்த்து அனுபவிக்கிற ரசிகர்களின் ரியாக்‌ஷன் கொஞ்சம் கலவரமாகவே இருக்கும்.

விஷாலின் 'ஆக்சன்' வெற்றியா ? தோல்வியா ? படம் எப்படி இருக்கு..?வீடியோ..!

click me!