‘என்னடா இது விக்ரம் வாரிசுக்கு வந்த சோதனை...மீண்டும் தள்ளிப் போகிறதா ‘ஆதித்ய வர்மா?’...

Published : Nov 15, 2019, 03:21 PM IST
‘என்னடா இது விக்ரம் வாரிசுக்கு வந்த சோதனை...மீண்டும் தள்ளிப் போகிறதா ‘ஆதித்ய வர்மா?’...

சுருக்கம்

திரையுலகில் வெற்றிகளை விட சோதனைகளையே அதிகம் கண்டு பழுத்த அனுபவம் பெற்றவரான விக்ரம் தனது மகன் துருவின் முதல் படம் பெரிய ஹீரோக்களின் படங்களுடன் மோதாமல் தனித்துதான் வரவேண்டும் என்பதில் நீண்டகாலமாக உறுதியாக இருக்கிறார். அப்படி முடிவெடுத்த தேதிதான் நவம்பர் 22. ஆனால் இன்று ரிலீஸாகியிருக்கவேண்டிய விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ ஃபைனான்ஸ் பிரச்சினைகளால் ரிலீஸாகவில்லை.

பெரிய நட்சத்திரங்களுடன் மோதாமல் தனித்து வரவேண்டும் என்ற எண்ணத்தில் பல ரிலீஸ் தேதிகளைத் தவிர்த்து வந்த துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’படத்துக்கு விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தின் மூலம் ஒரு சோதனை காத்திருக்கிறது.எனவே அப்படம் அடுத்த வாரம் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திரையுலகில் வெற்றிகளை விட சோதனைகளையே அதிகம் கண்டு பழுத்த அனுபவம் பெற்றவரான விக்ரம் தனது மகன் துருவின் முதல் படம் பெரிய ஹீரோக்களின் படங்களுடன் மோதாமல் தனித்துதான் வரவேண்டும் என்பதில் நீண்டகாலமாக உறுதியாக இருக்கிறார். அப்படி முடிவெடுத்த தேதிதான் நவம்பர் 22. ஆனால் இன்று ரிலீஸாகியிருக்கவேண்டிய விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ ஃபைனான்ஸ் பிரச்சினைகளால் ரிலீஸாகவில்லை.

தயாரிப்பாளருக்கு ‘வீரம்’சமயத்தில் விநியோகஸ்தர்களுக்கு தரவேண்டிய பாக்கி, விஜய் சேதுபதிக்கு சென்று சேர வேண்டிய செட்டில்மெண்ட், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பாக்கி என பலமுனை பிரச்சினைகளால் படம் சிக்கித் தவிக்க, கடந்த மூன்று நாட்களாக நடந்துவரும் பஞ்சாயத்து இன்று மதியம் வரை முடிவுக்கு வந்தபாடில்லை. துவக்கத்தில் இன்று மாலைக் காட்சிகளுக்கு ரிலீஸ் பண்ண எடுக்கப்பட்ட முயற்சிகள் தற்போது நாளை எப்படியாவது படத்தை ரிலீஸ் பண்ணிவிடவேண்டும் என்பதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறதாம். ஆனால் நிலவரம் இந்த வார ரிலீஸுக்கு சாதகமாக இல்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அப்படி ஒருவேளை நடந்து சங்கத்தமிழன் ரிலீஸ் 22ம் தேதிக்கு மாற்றப்படுமானால் விஜய் சேதுபதி படத்துடன் மோத விக்ரம் விரும்பமாட்டார் என்றே தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pandian Stores 2 : குமாருக்கு அரசியை பெண்கேட்டு சென்ற காந்திமதி... பாண்டியன் ஃபேமிலி கொடுத்த ட்விஸ்ட்
Siragadikka Aasai : மனோஜின் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு... ரோகிணியை விஜயா திடீரென சந்தித்தது ஏன்?