
தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்த விஜய்யின் 'பிகில்' திரைப்படம் 4 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அட்லீ - விஜய் கூட்டணியில் 3வது படமாக வெளிவந்த 'பிகில்' திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் விஜய் உடன் நயன்தாரா, கதிர், யோகிபாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கோச், ராயப்பன் ஆகிய 2 கெட்டப்புகளில் விஜய் அசத்தியிருந்தார். தாறுமாறு வெற்றிகளைக் குவித்து வரும் 'பிகில்' திரைப்படம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் அட்லீ வெளியிட்ட புகைப்படம் ஒன்று பிரச்னையை கிளப்பியுள்ளது. சமீபத்தில் இயக்குநர் அட்லீ பிகில் ஜெர்ஸியை போட்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அட்லீயுடன், விஜய் மற்றும் படத்தில் நடித்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த புகைப்படத்தை பார்த்த பாடலாசிரியர் விவேக் அட்லீ மீது செம்ம கோவத்தில் உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவேக், இதெல்லாம் அநியாயம், இதை கேட்க யாரும் இல்லையா? எனக்கும் புல்லிங்களுக்கும் டீ-சர்ட் பார்சர் ப்ரோ என அட்லீக்கு அன்புக் கட்டளை போட்டுள்ளார்.
விஷாலின் 'ஆக்சன்' வெற்றியா ? தோல்வியா ? படம் எப்படி இருக்கு..?வீடியோ..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.